பக்கம் எண் :

சீறாப்புராணம்

1005


இரண்டாம் பாகம்

மதீனம்புக்க படலம்

 

கலிநிலைத் துறை

 

2702. உதய மால்வரைப் பருதியை நிகர்ப்பவொட் டகத்தின்

     விதிய வன்றிருத் தோழருந் துணைவரும் விரிபூ

     வுதிருஞ் சோலையி னளியிசைத் திசைதிசை யோங்கும்

     பொதுவர் முல்லையுங் குறிஞ்சியுங் கடந்தயல் போனார்.

1

      (இ-ள்) சகல ஜீவ ராசிகளின் நியமிப்பையு முடையவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய தோழராகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா அஹ்மது  முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் அவர்களின் நேசரான அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களும் பெருமை பொருந்திய உதய கிரியினது சூரியனைப் போன்று ஒட்டகத்தின் மீது விரிந்த புஷ்பங்கள் சிந்தா நிற்கும் காவுகளின் வண்டினது கீதமானது திக்குகளெல்லாவற்றிலும் பொலிகின்ற அந்த இடையர்களினது முல்லை நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையுந் தாண்டி அப்புறஞ் சென்றார்கள்.

 

2703. மக்க மாநகர் விடுத்துநன் மதீனமா நகரம்

     புக்கு தற்கிட மெனவரு நெறியினிற் புறத்தி

     லொக்க லோடசு காபிக ளொவ்வொரு பெயரா

     யக்கம் போக்கிப்பின் படைத்தவர் போலவந் தடுத்தார்.

2

      (இ-ள்) அவ்வாறு திரு மக்கமா நகரத்தை விட்டு நன்மை பொருந்திய திரு மதீனமா நகரத்தில் போய்ச் சேர்வதற்கான தானமென்று சொல்லும் வண்ணம் பாதையினிடத்து அசுஹாபிமார்கள் தங்களினிரு மருங்குகளிலும் தம் பந்து ஜனங்களோடு தங்களின் நயனங்களை அகற்றிப் பின்னர்ப் பெற்றவர்களைப் போன்று ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தார்கள்.

 

2704. பின்னு மோர்பகற் போக்கிய நெறியினிற் பிரியா

     மின்னும் வெங்கதிர் வேலவர் நூற்றினு மேலார்

     மன்னு மெய்யிடம் விடுத்தநல் லுயிரென வந்தார்

     சொன்ன யம்பெறு முகம்மது மனக்களி துளங்க.

3

      (இ-ள்) பின்னரும் ஓர் பகற் பொழுதை யகற்றிச் சென்ற பாதையினிடத்து நீங்காது பிரகாசியா நிற்கும் வெவ்விய கிரணத்தை யுற்ற வேலாயுதத்தை யுடையவர்களான அசுஹாபிமார்கள் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் வார்த்தையினது இன்பத்தைப் பெற்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி