பக்கம் எண் :

சீறாப்புராணம்

1008


இரண்டாம் பாகம்
 

செலுத்தி நீண்ட பொலிவைத் தரா நிற்கும் பெரிய கீர்த்தியை நிலையாக நிற்கச் செய்து களங்க மின்றி ஓ ரரசனைப் போன்றிருந்தது.

 

2712. பொறிகளைந் தெனப்பவ மைந்தும் போக்கலாற்

     குறியுட னொருநிலை கொண்டு மேவலா

     னெறியுட னெங்கணும் வாய்மை நிற்றலா

     லறிவரொத் திருந்ததவ் வணிகொண் மாநகர்.

11

      (இ-ள்) அன்றியும், அலங்காரத்தைக் கொண்ட பெருமையையுடைய அந்தத் திரு மதீனமா நகரம் கண், காது, தோல், நா, மூக்காகிய பஞ்சேந்திரியங்களினது செயல்களையும் இல்லாமற் செய்ததை நிகர்த்து, பொய், கொலை, களவு, கள், காம மாகிய பஞ்ச பாதகங்களையும் அகற்றுவதாலும், குறிப்போடும் ஒப்பற்ற நிலைபரத்தைக் கொண்டு பொருந்துவதாலும், ஒழுங்குடன் எவ்விடத்தும் சத்திய மானது நிற்பதாலும், ஞானிகளை நிகர்த்திருந்தது.

 

2713. தெண்டிரை யாரமும் பூணுஞ் சிந்தலாற்

     விண்டுபற் பலபல மொழிவி ளம்பலான்

     மண்டிய வளந்தலை மயங்க லான்மது

     வுண்டவ ரெனமதர்த் திருந்த வொண்ணகர்.

12

      (இ-ள்) அன்றியும், பிரகாசத்தைக் கொண்ட அந்தத் திரு மதீனமா நகரம் தெள்ளிய சமுத்திரத்தினது முத்துக்களையும் ஆபரணங்களையுஞ் சிதறுவதாலும், மாந்தர்கள் பல்லைத் திறந்து பற்பல வார்த்தைகளைக் கூறுவதாலும், நெருங்கிய செல்வமானது ஒன்றோடொன்று கலப்புறுவதாலும், கள் ளருந்தினோர்களை நிகர்த்துச் செழித்திருந்தது.

 

2714. தானமு மொழுக்கமுந் தவமு மீகையு

     மானமும் பூத்ததிண் மறனும் வெற்றியு

     மூனமி லூக்கமு மொளிரக் காய்த்தநல்

     தீனெனுஞ் செல்வமே பழுத்த சேணகர்.

13

      (இ-ள்) அன்றியும், பெருமையை யுடைய அந்தத் திரு மதீனமா நகரம் புண்ணியமும் சன்மார்க்கமும் தவமும் கொடையும் அபிமானமும் மலரப் பெற்ற திண்ணிய வலிமையும் விஜயமும் குற்றமற்ற உற்சாகமும் பிரகாசிக்கும் வண்ணம் காய்த்த நன்மை பொருந்திய தீனுல் இஸ்லா மென்னும் ஆக்க மானது கனியப் பெற்றது.