பக்கம் எண் :

சீறாப்புராணம்

101


முதற்பாகம்
 

யாருமில்லை. அதனால் விளைவதினி யென்னையோ ஒன்றுமில்லை.

 

227. மண்ண ருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயினோ

    யுண்ணி ரந்தில மெய்பல வருந்தில வுதரக்

    கண்ணி ருந்தபூப் பொன்றுமே கண்டில கனிமென்

    பண்ணி ருந்தவாய் வெளுத்தில பலன்பெறும் படியே.

62

     (இ-ள்) மகவையீன்று பலனைப் பெறும்படி ஆமினா மற்றக் கருப்பஸ்திரீகளைப் போல மண்ணைத் தின்றிலள், புளிப்புக்களை விரும்பி அருந்திலள், வயிற்றினுட்புறத்தும் கருப்பத்தினாலுண்டாகும் வருத்தமானது கலந்திலது, சரீரம் பலவகையாய் வருத்தமுற்றிலது, வயிற்றின் கண்ணிருத்தற் பாலதான சூதகக்குறியொன்றும் வெளிப்படக் கண்டிலது, தொண்டைக் கனிபோலும் மெல்லிய இசைகள் குடியிருக்கும், வாயானது வெளுத்திலது.

 

228. சிறுத்த மெல்லிடை பருத்திருந் திலதிரு வுதரம்

    பொறுத்து வீங்கில வுந்திமேற் புடைத்தில பொருப்புங்

    கறுத்திருந்தில பசுநரம் பெழுந்தில கவின்கள்

    வெறுத்தி ருந்தில கருப்பமென் றழகுறும் விதமே.

63

     (இ-ள்) அன்றியும், சிறிதாகிய மெல்லிய விடையானது பருமையாயிருந்திலது, தெய்வீகத்துவ வயிறானதும் பாலனைச் சுமந்து வேண்டியவளவும் பருத்திலது, நாபியும் மேலே எழும்பித் தோன்றிலது, தனபாரங்களும் முகத்திற் கறுப்புற்றிருந்தல்லன, பசிய நரம்புகளும் ஆங்காங்கு எழும்பியில்லன, அவயவத்தினழகுகளும் வெறுப்புற்றிருந்தில்லன, சூலென அழகுபொருந்தும் வகையிவை.

 

229. என்றும் பற்பல மொழிந்துச பாசலித் திருப்ப

    மன்ற லங்குழ லாமினா கருப்பமும் வலியு

    மின்று தோன்றுவ தெனவெடுத் தியம்பின ரிலங்கும்

    வென்றி வேல்விழி மடந்தையர்க் கிவைசொலி விடுத்தார்.

64

     (இ-ள்) மேலே கூறியனவேயுமன்றி இன்னும் அனேக விதங்களாகவும் சபா அவர்கள் சொல்லிச் சலிப்புற்றிருக்க, வாசனைபொருந்திய அழகிய கூந்தலையுடைய ஆமினாவானவர்கள் கருப்பமும் அதன் நோவும் இப்போது வெளிப்படுகின்றதென்று தமது தாய் முதலாயினார்க்கு எடுத்துச் சொன்னார்கள். அப்படி அவர்கள் சொன்னமாத்திரத்தில் அவர்களின் தாய்முதலாயினார் பிரகாசியா நிற்கும் வெற்றியை யுடைய வேல் போலுங் கண்களையுற்ற அந்நியப் பெண்களுக்குப்

s