பக்கம் எண் :

சீறாப்புராணம்

1012


இரண்டாம் பாகம்
 

2725. நீடிய கற்றாவெனு மெல்லை நீங்கியோர்

     பாடியுங் கடந்துதம் பரிச னத்தொடுங்

     கூடிய பனீயமு றென்னுங் கூட்டத்தை

     நாடியங் கொருநெறி நடந்து போயினார்.

24

      (இ-ள்) அவ்வாறு புறப்பட்டு நீட்சியை யுடைய கறாவென்று கூறும் அந்தத் தானத்தை விட்டகன்று தங்களின் கூட்டத்தார்களோடும் ஓர் சிற்றூரையுந் தாண்டிப் பனீயமுறென்னுந் திரண்ட கூட்டத்தை விரும்பி அவ்விடத்திலுள்ள ஓர் பாதையின் கண் நடந்து சென்றார்கள்.

 

2726. வரிவராற் பகடுகள் வனச வாவியுஞ்

     சொரிமதுச் சோலையுங் கதலிச் சூழலுந்

     தெரிதரக் கண்டுசென் றின்பச் செல்வமே

     தருகுபா வென்னுமத் தலத்தை நண்ணினார்.

25

      (இ-ள்) அவ்விதஞ் சென்று நீட்சியைப் பெற்ற ஆண் வரால் மீன்கள் குதிக்கா நிற்கும் தாமரை புட்பங்களை யுடைய தடாகங்களையும், தேனைச் சிந்துகின்ற பூங்காவுகளையும், வாழை மரத்தினது தானங்களையும், விளங்கும் வண்ணம் நோக்கி நடந்து இன்பத்தைக் கொண்ட வளத்தைத் தருகின்ற குபா வென்று கூறும் அந்தத் தானத்தைப் போயடுத்தார்கள்.

 

2727. ஆசிலா தவரொடும் றபீயி லவ்வலின்

     மாசம்பன் னிரண்டினில் வதிந்த திங்களிற்

     பாசமுற் றவரிடம் பரிந்து நந்நபி

     வாசமுற் றுறைந்தனர் மகிழ்வின் மாட்சியால்.

26

      (இ-ள்) நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் களங்க மற்றவர்களாகிய அந்த அசுஹாபி மார்களுடன் றபீயுல் அவ்வல் மாதத்தின் பன்னிரண்டாவது தேதியிலுறைந்த திங்கள் கிழமையத் தினத்தில் அந்த ஜனங்க ளிடத்தில் அன்பைப் பொருந்திப் பரித லுற்றுச் சந்தோஷத்தினது பெருமையால் அங்கு தங்கியிருந்தார்கள்.

 

2728. ஏடவிழ் மாலையர் பலரு மேந்தலும்

     பீடுபெற் றவ்விடத் திருப்பப் பெய்ம்முகி

     லோடிய தெனநற வூற்றுந் தாருடை

     யாடக வரைப்புயத் தலியும் வந்தனர்.

27

      (இ-ள்) அரச ரான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும், இதழ்களானவை விரியப் பெற்ற புட்பங்களாலான மாலைகளை