இரண்டாம் பாகம்
யுடைய பல அசுஹாபிமார்களும், அவ்வாறு
பெருமை யடைந்து அந்தக் குபாவென்னுந் தலத்தின் கண் தங்கியிருக்க ஜலத்தைப் பொழியா நிற்கும்
மேகங்களானவை விரைந்து செல்வன போலும் தேனைச் சொரிகின்ற மாலையையுடைய மகாமேருப் பருவதத்தை
நிகர்த்த தோள்களைக் கொண்ட அலியிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களும் அங்கு வந்து
சேர்ந்தார்கள்.
2729.
பண்டரு மறைப்பய காம்பர்
மாமுகங்
கண்டனர் பதத்தினிற் கரங்க
டேய்த்தனர்
விண்டன ராகுலம் வீறு மேன்மையுங்
கொண்டனர் மனத்தினுங்
களிப்புக் கொள்ளவே.
28
(இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த
அவர்கள் கீதத்தைத் தரா நிற்கும் புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுடைய பயகாம்பரான நாயகம்
நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் பெருமை
பொருந்திய வதனத்தைப் பார்த்துத் தங்களின் கைகளைக் கொண்டு அவர்களின் திருவடிகளிற் றடவி
மனதின் கண்ணுள்ள துன்பங்களைப் புகன்று இதயத்திலும் மகிழ்ச்சி கொள்ளும் வண்ணம் பெருமையும் மேன்மையுங்
கொண்டார்கள்.
2730.
திருப்பரு முயிருடற் சேர்ந்த
தொத்தென
வரிப்புலி யலிதமை மார்பு
றத்தழீஇ
யிருப்பமற் றவ்விடத் திருந்த
மன்னரும்
பொருப்பெனும் புயங்களிற்
பொருந்தப் புல்லினார்.
29
(இ-ள்) அவர்கள் அவ்விதங்
கொள்ள, நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள்
திருப்புதற் கருமையான தங்களின் ஆவியானது சரீரத்திற் பொருந்தியதை ஒப்பென்று சொல்லும் வண்ணம்
இரேகைகளையுடைய புலியாகிய அவ் வலிறலி யல்லாகு அன்கு அவர்களைத் தங்களின் மார்பினிடத்துப்
பொருந்தும்படி கட்டியணைத்து அவ்விடத்தில்
தங்கியிருக்க, அந்தக் குபா வென்னுந் தானத்தின் கண்ணிருந்த ஏனைய அரசர்களான அசுஹாபிமார்களும்
மலையைப் போன்ற தங்களின் தோள்களிற் பொருந்தும் வண்ணம் கட்டியணைத்தார்கள்.
2731.
அவிரொளி முகம்மது மாவி
போன்றவ
ரெவருமற் றின்புற விருந்தவ்
வூரினிற்
சவிதரும் வெண்சுதை தயங்க வெங்கணுங்
கவினுறப் பள்ளியொன் றரிதிற்
கட்டினார்.
30
|