இரண்டாம் பாகம்
(இ-ள்) அன்றியும், ஒளிரா
நிற்கும் பிரகாசத்தையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகள் முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு
அலைகிவசல்ல மவர்களும் அவர்களின் பிராணனை நிகர்த்த மற்ற அசுஹாபி மார்களியாவரும் இனிமையுற
அந்தக் குபா வென்னும் நகரத்தின் கண்ணுறைந்து அங்கு ஒளியைத் தருகின்ற வெண்ணிறத்தைக் கொண்ட
சுண்ணச்சாந் தெவ்விடத்து மிலங்க அழகானது பொருந்தும் வண்ணம் ஒரு பள்ளியை அருமையோடும் கட்டினார்கள்.
2732.
ஆயவப் பள்ளியிற் றொழுதன்
னோருட
னாயக நபிபதி னாலு நாளின்மேற்
றாயக
மெனப்பனீ சாலி மென்னுமத்
தூயவ ரிருப்பிட மதனிற்
றோன்றினார்.
31
(இ-ள்) அவ்வாறு கட்டி
முடித்த அப் பள்ளியின் கண் நாயகராகிய நபிகட் பெருமான் நபி முகம்மது முஸ்தபா றசுல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் தந்து அசுஹாபிமார்களுடன் ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவை வணங்கிப் பதினான்கு
நாட்களின் பிற்பாடு தங்களின் தாயகத்தைப் போன்ற பனீசாலி மென்று கூறும் பரிசுத்தத்தை யுடையோரினது
உறை விடத்தின்கண் போய்த் தோன்றினார்கள்.
2733.
பனியமு றென்பவர் வாழ்கு
பாவுக்கும்
நனிபுகழ் மதீனமா நகர்க்கு
நாப்பணி
னனைமலர் வாவிசூழ் றாத்தூ
னாவெனப்
புனையெழிற் குடியிடைப்
பொலிய வைகினார்.
32
(இ-ள்) அவ்விதம் தோன்றிப்
பனியமு றென்று சொல்லும் அபிதானத்தை யுடையவர்கள் வாசஞ் செய்கின்ற குபா வென்னும் அந்நகரத்திற்கும்
மிகுந்த கீர்த்தியை யுடைய திரு மதீனமா நகரத்திற்கும் மத்தியில் தேனைக் கொண்ட புஷ்பங்களையுடைய
தடாகங்களானவை சூழப் பெற்ற றாத்தூனா வென்று அலங்கரித்த அழகை யுடைய சிற்றூரின் கண்
பொலியும் வண்ணம் போயிருந்தார்கள்.
2734.
தரைபுகழ் வலிபனீ சாலி மென்னுமப்
புரவலர் தலத்தினி
லிருக்கும் போழ்தினி
லரிஅமு சாவும றாதி மாமறை
தெரியுது மானொடும் வந்து சேர்ந்தனர்.
33
(இ-ள்) நாயகம் நபிகட்
பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இப் பூலோகமானது துதியா
நிற்கும் வல்லமையை யுடைய அந்த பனீசாலி மென்று
|