இரண்டாம் பாகம்
கூறும் மன்னவர்களினது வீட்டின்
கண் அவ்வா றிருக்குஞ் சமயத்தில், எப் பொருட்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின்
பெருமை பொருந்திய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுணர்ந்த சிங்கத்தை நிகர்த்த ஹமுசா றலி
யல்லாகு அன்கு அவர்களும், உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு அவர்களும், உதுமா னிபுனு அப்பான் றலியல்லாகு
அன்கு அவர்களோடும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
2735.
தந்தைய ரெனுமமு சாவுந் திண்புய
வெந்திற லுமறுது மானு மேயபின்
புந்தியிற் களித்திரு
புயங்கள் வீங்கிடச்
சந்தணி மார்புறத் தழீஇயி
னாரரோ.
34
(இ-ள்) தங்களின்
சிறிய பிதா வென்று கூறா நிற்கும் அந்த ஹமுசா றலி யல்லாகு அன்கு அவர்களும், திண்ணிய தோளினது
வெவ்விய வலிமையை யுடைய உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு அவர்களும், உதுமா னிபுனு அப்பான் றலி
யல்லாகு அன்கு அவர்களும், அவ்வாறு வந்து சேர்ந்த பிற்பாடு நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் மனதின் கண் சந்தோஷமடைந்து இரண்டு
தோள்களும் பூரிக்கும் வண்ணம் சந்தனக் குழம்பைத் தரித்த நெஞ்சி னிடத்துப் பொருந்தும்படி
அவர்களைக் கட்டி யணைத்தார்கள்.
2736.
மரைமல ரொடுமரை மலரை வைத்தெனச்
சரகணி முறையொடுந் தடக்கை
தாங்கொடுத்
துரியபா றயிரொடு முணவு மீந்திடு
கரையிலா வுவகையங்
களிப்பின் வைகினார்
35
(இ-ள்) அன்றியும், தாமரைப்
புஷ்பத்துடன் வேறோர் தாமரைப் புஷ்பத்தை வைத்ததைப் போன்று ஷறகினது அழகிய ஒழுங்கோடும்
பெருமை பொருந்திய தங்களின் கைகளைக் கொடுத்துத் தகுந்த பால், தயிராகிய இவைகளுடன் ஆகாரமு
மருளி இடுகின்ற கரையற்ற விருப்பத்தைக் கொண்ட அழகிய சந்தோஷத்தோடு முறைந்திருந்தார்கள்.
2737.
வேலிடுஞ் செழுங்கர வீர
ராம்பனீ
சாலிமென் பவருறை தலத்தி
னன்புற
நாலுநா ளிருந்துபி னவர்க்கு
நன்கொடு
பாலினு மினியசொற் பயிற்றி
னாரரோ.
36
(இ-ள்) வேலாயுதத்தைத்
தரித்த செழிய கையினது வலிமையை யுடையவர்களான அந்தப் பனீசாலி மென்பவர்கள்
|