பக்கம் எண் :

சீறாப்புராணம்

1017


இரண்டாம் பாகம்
 

அவ்விடத்தில் உயர்வானது பொருந்தப் பெற்ற ஜீமுஆ குத்துபா தொழுகையைப் புதிதாய்த் தொடங்கி யுண்டாக்கினார்கள்.

 

2741. வெற்றிசேர் நால்வரும் வேந்தர் தம்மொடு

     முற்றினி தோங்கியங் குறைந்த பேரொடு

     மற்றைநா ளிருந்தவ ணகன்று பூம்பொழில்

     சுற்றிய மதீனமா நகரிற் றோன்றினார்.

40

      (இ-ள்) அவ்வாறு உண்டாக்கிய அரசரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும், விஜயத்தைப் பொருந்திய அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு, உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு, உதுமா னிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு, அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு, ஆகிய நால்வர்களும், தங்களுடன் இனிமை யோடுஞ் சேர்ந்து அங்கு தங்கிய அசுஹாபிமார்களோடும், அடுத்த சனிக் கிழமை யுறைந்து அவ்விடத்தை விட்டும் நீங்கிப் புஷ்பங்ளினது சோலை யானது வளையப் பெற்ற திரு மதீனமா நகரத்தின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2742. கதிரயி லேந்துமு காசி ரீன்களுஞ்

     சதிபயில் புரவியன் சாரி மார்களு

     முதிருந்தீன் தீனெனு முழக்க மார்த்தெழப்

     புதியவன் றிருநபி புரத்திற் புக்கினார்.

41

      (இ-ள்) அவ்வாறு விளங்கிய புதிய ஆலத்தை யுடையவ னான ஜல்ல ஷகுனகு வத்த ஆலாவின் தெய்வீகந் தங்கிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பிரகாசத்தைக் கொண்ட வேலாயுதத்தைத் தாங்கிய முகாஜிரீன்களும் தாள வொத்திற் பழகிய குதிரைகளையுடைய அன்சாரீன்களும் முற்றிய தீன்! தீன்!! என்று சொல்லும் ஓசையானது ஒலித்து ஓங்கும் வண்ணம் அத் திருமதீனமா நகரத்தின் கண் போய்ப் புகுந்தார்கள்.

 

2743. வட்டவா னிழறர வந்த நந்நபி

     யொட்டகை மேற்கயி றதனை யூரவர்

     தொட்டனர் நெருங்கினர் சுமைகொண் டார்த்தனர்

     விட்டில ரவரவர் விருப்பின் செய்கையால்.

42

      (இ-ள்) அவ்வாறு வட்ட வடிவைக் கொண்ட மேகக் குடையினது நிழலைத் தரும் வண்ணம் வந்து புகுந்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களினது ஒட்டகையின் மீதுள்ள கயிற்றை