இரண்டாம் பாகம்
(இ-ள்) அன்றியும், என்
கையிற் பிடிபட்ட கயிற்றை நீங்கள் கைகளாற் பற்றித் தடைப் படுத்தினால் அவ் வொட்டக மானது
தான் போய்ச் சாரும் இடத்திற் போய்ச் சாராது. இங்கு நமது நாயகனான அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவைத்
தனது தெய்வீகந் தங்கிய இதயத்தின் கண் சிந்தித்து அழகைப் பொருந்திய அவ்வொட்டக மானது
வருகின்றது.
2748.
கறங்கிய கடலெனக் களித்தி
டாநகர்ப்
புறங்கிடந் துறையினு நடுவண்
புக்கினு
நிறங்கிள ரொட்டக நினைவி
னேர்வழி
யிறங்கிய விடத்தியா
னிருப்ப னென்றனர்.
47
(இ-ள்) அன்றியும், சத்தியா
நிற்கும் சமுத்திரத்தைப் போன்று சந்தோஷித்து எம்மைக் கொண்டு போய் வையாது இந்தத் திரு
மதீனமா நகரத்தினது வெளியிற் படுத்துத் தங்கினாலும் ஊரினது மத்தியிற் போய் நுழைந்து தங்கினாலும்,
பிரகாச மானது ஓங்கப் பெற்ற இவ் வொட்டகத்தின் சிந்தையினது ஒழுங்காகிய முறைமையில் யானிறங்கி
அந்தத் தானத்தி லுறைகுவே னென்று சொன்னார்கள்.
2749.
மாசிலா னருள்கொடு நடந்த
வாகனப்
பாசமேற் குவிகரப் பதுமக்
கொள்ளைகள்
காசில்வண் புகழ்நபி கழறுஞ்
சொற்கதிர்
வீசிடச் சடுதியின் விரிந்து
நின்றவால்.
48
(இ-ள்) குற்ற மற்றவ
னான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் காருண்ணியத்தைக் கொண்டு சென்ற வாகன மாகிய அவ் வொட்டகத்தினது
கயிற்றின் மீது குவிந்த கைகளான தாமரைக் கூட்டங்கள், களங்க மற்ற அழகிய கீர்த்தியை யுடைய
நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு
சொன்ன சொல்லாகிய சூரியனது பிரகாசமானது வீச, விரைவில் மலர்ந்து நின்றன.
2750.
கோதிலா தடர்ந்தெதிர்
குவிந்த மன்னவர்
வீதியி னத்திரி விடுத்த
பின்னெழிற்
சோதிமெய் துகள்படாத் தூத
ரும்மரைப்
போதெனுஞ் செழுங்கரப் பூட்டு
நீக்கினார்.
49
(இ-ள்) களங்க மின்றி
நெருங்கி முன்னர்க் கூடிய அரசர்களான அந்த அசுஹாபிமார்கள் அவ் வொட்டகத்தை அவ்வாறு தெருவினிடத்து
விட்ட பிற்பாடு அழகிய பிரகாசத்தைக் கொண்ட தேகத்தின் கண் தூசியானது சேரப் பெறாத றசூ
லாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
|