பக்கம் எண் :

சீறாப்புராணம்

1020


இரண்டாம் பாகம்
 

அலைகிவசல்ல மவர்களும் தங்களின் தாமரைப் புட்ப மென்று கூறும் செழிய கையினது பூட்டை யொழித்தார்கள்.

 

2751. இடந்தனி னின்றவ ரியாரு மின்புற

     வடந்தனை விடுத்தன ரென்று மாசிலா

     நெடுந்தட வரையென நின்ற வொட்டக

     நடந்தது தனியவ னருளை நாடியே.

50

      (இ-ள்) பக்கத்தில் நின்றவர்களாகிய அந்த அசுஹாபிகளியாவரும் அவ்வாறு  இனிமையானது பொருந்தும் வண்ணம் கயிற்றை விட்டார்க ளென்று நீண்ட பெருமை பொருந்திய பருவதத்தைப் போலும் நிற்கப் பெற்ற குற்ற மற்ற அவ் வொட்டகமானது ஏகனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் காருண்ணியத்தைச் சிந்தையின் கண் சிந்தித்து நடந்து சென்றது.

 

2752. சோதிமென் கொடியெனத் தோன்று மாமினா

     மாதுல ராகிய பனீநஜ் ஜாறுகள்

     காதர் மறவருங் காணி யாகிய

     பூதலத் திடைதனி பொருந்தி நின்றதே.

51

      (இ-ள்) அவ்விதம் நடந்து சென்று மின்னலினது மெல்லிய கொடியைப் போலும் இப் பூலோகத்தின் கண் அவதரித்த ஆமினா அவர்களின் மாமன்மார்களாகிய தீவினைத் தொடர்புகள் அறும்படி வந்த பனீ நஜ்ஜா றென்பவர்களின் சொந்தமான பூமியினிடத்துப் பொருத்த முற்று ஒப்பற நின்றது.

 

2753. நின்றுநாற் றிசையினு நோக்கி நேரிலா

     வென்றிகொண் மெய்யசை யாது மெல்லென

     வொன்றிய தாளிணை யொடுக்கி நீடருங்

     குன்றென வுறைந்தவண் படுத்துக் கொண்டதே.

52

      (இ-ள்) அவ்வாறு நின்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கென்னும் நான்கு திக்குகளிலும் பார்த்து ஒப்பற்ற விஜயத்தைக் கொண்ட தனது சரீரமானது அசையப் பெறாமல் மெதுவாகப் பூமியின் கண் பொருந்திய பாதங்களைச் சுருக்கி நீண்ட மலையைப் போலும் அவ்விடத்தில் தங்கிப் படுத்துக் கொண்டது.

 

2754. உறைந்தவொட் டகம்பின ரெழுந்தவ் வூரவர்

     நிறைந்துநோக் கலுமெல நடந்து நீடொளி

     குறைந்திலாத் தெருப்பல குறுகி நின்றது

     மறைந்திடா தொருதலை வாயின் மேவியே.

53

      (இ-ள்) அவ்விதம் தங்கிய அவ் வொட்டகம் பிறகு எழும்பி அந்தத் திரு மதீனமா நகரத்தார்கள் பொலிந்து பார்த்து வளவில் பைய நடந்து நீண்ட பிரகாசமானது குறையாத பல வீதிகளைக்