பக்கம் எண் :

சீறாப்புராணம்

1021


இரண்டாம் பாகம்
 

கிட்டி ஒரு தலை வாயிலிற் போய்ப் பொருந்தி மறையாமல் நின்றது.

 

2755. கொடிமதிண் மாடவாய்க் குறுகிக் கோதற

     நெடியவன் றூதரைச் சுமந்து நேரிலா

     வடிவுற நின்றவொட் டகமவ் வாயிலின்

     படியுறப் படுத்தது பலருங் காணவே.

54

      (இ-ள்) துவஜங்களின் மதில்களை யுடைய மாளிகையினது தலைவாயிலின் கண் அவ்வாறு போயடைந்து நெடியவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூ லாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைக் குற்ற மறும் வண்ணந் தாங்கி ஒப்பற்ற அழகானது மிகும்படி நின்ற அவ்வொட்டகம் அந்தத் தலை வாயிலின் படியானது பொருந்தும் வண்ணம் பல பேரும் பார்க்கப் படுத்தது.

 

2756. கொய்யுளைப் பரியவர் குழுமிப் பின்வரக்

     கையினிற் றரித்தவேற் காவ லோர்அபூ

     அய்யுபு வாயிலிற் படுத்த வத்திரி

     வையகம் புகழ்தர மறுத்தெ ழுந்ததே.

55

      (இ-ள்) புற மயிரைக் கொண்ட குதிரையை யுடையவர்களான அவ் வசுஹாபிமார்கள் திரண்டு பின்னால் வரும் வண்ணம் கரத்தினிடத்துப் பூண்ட வேலாயுதத்தை யுடைய அரசராகிய அபூ அய்யூபென்பவரின் தலை வாயிலினிடத்து அவ்வாறு படுத்த அவ் வொட்டகம் இப் பூமியானது துதிக்கும்படி மீண்டும் எழும்பிற்று.

 

2757. எழுந்தவொட் டகம்விரைந் தேகித் தேன்மழை

     பொழிந்தென நபிசல வாத்துப் பொங்கவே

     யழுந்திமெய் யுறமுதற் படுத்த வவ்வயி

     னிழிந்திடும் படிபினும் படுத்தி ருந்ததே.

56

      (இ-ள்) அவ்விதம் எழும்பிய அவ் வொட்டகம் விரைந்து சென்று மது மாரி பொழிந்ததைப் போன்று நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் சலவாத் தானது அதிகரிக்க முன்னர்த் தனது சரீரம் பொருந்தும்படி பதிந்து படுத்த அந்த விடத்தில் பின்னும் இறங்கும் வண்ணம் படுத்திருந்தது.

 

2758. ஒடுங்கிடத் தாண்மடித் துறைந்த வொட்டக

     நெடுங்கழுத் தின்சுரிப் பின்றி நீட்டியே

     யிடங்கொள்வாய் பிளந்துநா வெடுத்து நின்றவ

     ரடங்கலுஞ் செவிக்கொளக் கூப்பிட் டார்த்ததால்.

57