பக்கம் எண் :

சீறாப்புராணம்

1022


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) பாதங்களைச் சுருங்கும் வண்ணம் மடக்கி அவ்வாறு தங்கிய அவ்வொட்டகம் தனது நெடிய கழுத்தின் சுரிப்பான தில்லாமல் நீளச் செய்து விசாலித்த வாயைத் திறந்து நாவைத் தூக்கி அங்கு நின்ற யாவர்களும் தங்களின் காதுகளிற் கொள்ளும் வண்ணம் சத்தித்துக் கூப்பிட்டது.

 

2759. ஒட்டகைக் குரற்பொரு ளுணர்ந்து நந்நபி

     வட்டவெண் டவிசின்மேல் வதிந்த மெல்லணை

     விட்டிழிந் தரியதீன் விளக்கு மேன்மையி

     னிட்டமுற் றவர்க்கெலா மெடுத்துக் கூறுவார்.

58

      (இ-ள்) அவ்வாறு கூப்பிட, அவ் வொட்டகையினது சத்தத்தினருத்தத்தை நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தெரிந்த வட்ட வடிவை யுடைய வெண்ணிறத்தைக் கொண்ட தவிசின் மீது தங்கிய மெல்லிய அணையை விட்டும் பூமியின் கண் ணிறங்கி அருமையான தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை விளக்கா நிற்கும் மேன்மையினது இஷ்டத்தைப் பொருந்தினவர்களான அவ் வசுஹாபிமார்க ளியாவருக்கும் எடுத்துச் சொல்லுவார்கள்.

 

2760. இன்றுதொட் டீறுநா ளளவு மென்னுயிர்க்

     கொன்றிய நால்வரோ டுறைந்து தீனிலை

     வென்றிகொண் டுறைவதித் தலமல் லாதுவே

     றின்றுநம் மேலவ னிசைத்த மாற்றமே.

59

      (இ-ள்) இன்றையத் தின முதல் கியாம நாள் பரியந்தம் எனது பிராணனைப் போலும் பொருந்திய அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு, உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு, உதுமா னிபுனு அப்பன் றலி யல்லாகு அன்கு,  அலி யிபுனு அபீத் தாலிபு றலியல்லாகு அன்கு, ஆகிய நாலவர்களுட னிருந்து தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினது விஜயத்தைப் பெற்று வாசஞ் செய்வது இவ்விட மன்றி வேறிடமில்லை. இஃது மேன்மையை யுடையவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் கற்பித்த கற்பனையாகும்.

 

2761. சடுதியி னொட்டகந் தரித்த நீணிலத்

     திடுமதிண் மனையெமக் கியற்று நாண்மட்டு

     மடுதிற லபூஅய்யூ பன்சாரி யாரகம்

     விடுதியென் றெடுத்துரை விளம்பி னாரரோ.

60

      (இ-ள்) அன்றியும், இவ் வொட்டக மானது விரைவி லுறைந்த நீண்ட இப் பூமியினிடத்து எமக்கான வைக்கா நிற்கும் சுவர்களை