பக்கம் எண் :

சீறாப்புராணம்

1023


இரண்டாம் பாகம்
 

யுடைய ஓர் மாளிகையைக் கட்டுகின்ற நாள் வரைப் பகைவரை மேற்கொள்ளும் வலிமையை யுடைய அபூ அய்யூ பாகிய அன்சாரி யென்பவரின் வீடானது எமக்கு உறைவிட மென்றெடுத்துக் கூறினார்கள்.

 

2762. முத்திரை முகம்மது மொழிந்து காட்டிய

     வுத்தரஞ் செவிப்புகுந் துணர்வு விம்மவே

     யித்தவ மெய்திய தெனக்கென் றன்னவர்

     மத்தகக் கரியென மதர்ப்பு வீங்கினார்.

61

      (இ-ள்) இலாஞ்சனையை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அவ்வாறு சொல்லிக் காட்டிய வார்த்தைகளானவை அந்த அபூ அய்யூ பென்பவரின் காதுகளில் நுழைந்து தெளிவான தோங்கவே, எனக்கு இந்தத் தவமானது கிடைக்கப் பெற்ற தென்று சொல்லி மத்தகத்தைக் கொண்ட யானையைப் போலும் இறுமாப்பான ததிகரிக்கப் பெற்றார்கள்.

 

2763. ஆதிதன் றிருவுளத் தாய வொட்டக

     மோதிய மொழிவழி யுணர்ந்து நன்னெறி

     வேதிய ருரைத்தனர் விதியி தென்னவே

     மாதவ ரியாவரு மகிழ்வுற் றார்களால்.

62

      (இ-ள்) மகா தவத்தை யுடைய மற்ற அசுஹாபிமார்களியாவரும் யாவற்றிற்கும் முதன்மைய னான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவின் திவ்விய சித்தத்தினாலான அவ் வொட்டக மானது அவ்விதங் கூவிய சத்தத்தின் ஒழுங்குகளைத் தெரிந்து நன்மை பொருந்திய தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தைக் கொண்ட புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தை யுடையவர்களான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் விதிக்கப்பட்டது இதுவென்று கூறினார்க ளென்று சொல்லிச் சந்தோட மடைந்தார்கள்.

 

2764. ஈரநன் மனத்துமு காசி ரீன்களைக்

     கார்நிழற் கவிகையார் கடிதிற் கூவியிவ்

     வூரினி லவரவ ருறவின் றன்மையிற்

     சார்பிட மெவணவன் சார்மி னென்றனர்.

63

      (இ-ள்) அவ்விதஞ் சந்தோட மடைய, அன்பைக் கொண்ட நன்மை பொருந்திய மனத்தை யுடைய முகாஜிரீன்களை மேகக் குடையினது நிழலை யுடையவர்களான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி