பக்கம் எண் :

சீறாப்புராணம்

1024


இரண்டாம் பாகம்
 

வசல்ல மவர்கள் கூப்பிட்டு இந்தத் திரு மதீனமா நகரத்தின் கண் நீங்கள் அவரவர்களின் சுற்றத்தினது தன்மையிற் போய்ச் சேரு மிட மெதுவோ? அவ்விடத்தில் விரைவிற் போய்ச் சேருங்க ளென்று கட்டளை யிட்டார்கள்.

 

2765. மாமறை முறைதெரி மதீன மன்னரைத்

     தாமதி யாதவர் சார்பிற் சார்கென

     நாமவேன் முகம்மதாண் டுரைப்ப நன்கெனக்

     கோமறு கிடந்தொறுங் குறுகி னார்களால்.

64

      (இ-ள்) அன்றியும், கீர்த்தியைக் கொண்ட வேலாயுதத்தையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் மகத் தாகிய புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது ஒழுங்குகளை யுணர்ந்த திரு மதீனமா நகரத்தின் அரசர்களான அன்சாரீன்களை நீங்கள் தாமதியாமல் அவரவர்களின் இருப்பிடங்களிற் போய்ச் சேருங்க ளென்று அங்கு கூற, அவர்கள் நல்ல தென்று இராச வீதியாகிய அங்குள்ள தெருக்க ளெல்லாவற்றிலும் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2766. கவரறு புந்திமு காசி ரீன்களு

     மவரவர் சார்பினிற் புகஅ பீஅய்யூப்

     திவளொளி மாளிகைத் திசையை நோக்கிநன்

     னபிகளி னாயக நடந்து போயினார்.

65

       (இ-ள்) பிளப் பற்ற இதயத்தையுடைய அம் முகாஜிரீன்களும் அவரவர்களின் சார்புகளில் அவ்வாறு போய்ச் சேர, பிரகாசியா நிற்கும் ஒளிவைக் கொண்ட அபூ அய்யூ பென்வரின் மாளிகையினது திசையைப் பார்த்து நன்மை பொருந்திய நபிகட் பெருமானாரான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் நடந்து சென்றார்கள்.

 

2767. படரொளி விரிதரப் பதியின் வீதிவா

     யிடனற நெருங்கிநின் றெவரும் வாழ்த்தவே

     யடல்பெறும் வீரா பூஅய் யூபெனும்

     வடவரைப் புயத்தினர் மனைபுக் காரரோ.

66

      (இ-ள்) அவ்விதஞ் சென்று விரிந்த பிரகாச மானது பரவவும், அத் திரு மதீனமா நகரத்தின் தெருக்களி னிடத்து யாவரும் இடமின்றிச் செறிந்து நின்று துதிக்கவும், விஜயத்தைப் பெற்ற வீரராகிய அவ் வபூ அய்யூ பென்னும் மகா மேருப் பருவதத்தை யொத்த தோள்களை யுடையவர்களினது வீட்டின் கண் போய் நுழைந்தார்கள்