பக்கம் எண் :

சீறாப்புராணம்

1028


இரண்டாம் பாகம்
 

மவர்களை மிகவும் தேடிக் கொண்டு சென்ற பொன்னைப் போன்ற பாதங்க ளிவையோ? என்று சொல்லித் தாமரைப் புட்பத்தைப் போலும் சிறந்த வதனத்தை எனது பாதங்களிற் பொருத்திக் கீதத்தைத் தரா நிற்கும் அழகிய வாயை வைத்து முத்த மிட்டுப் பற்பல தடவை முகந்து கொண்டார்.

  

2776. காலினை விடுத்து மாறாக் காரணர் வடிவை நாளு

     மாலுறப் பருகுங் கண்க ளிவையென மணிவாய் வைத்து

     மேலுற முகந்து முத்தி மெய்மயிர் சிலிர்ப்பப் பூரித்

     தோலவா ருதியை யொப்பா ருவந்தெனைப் புகழ்ந்து நின்றார்.

9

      (இ-ள்) சத்தத்தைக் கொண்ட சமுத்திரத்தை நிகர்த்தவ ரான இச் சிறுவர் அவ்வாறு முகந்த பாதங்களை விட்டு ஒழியாத காரணங்களை யுடைய அந்நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் வடிவத்தை வேட்கை  யானது பொருந்தும் வண்ணம் பிரதி தினமும் அருந்திய நயனங்களானவை இவை யென்று சொல்லி அழகிய வாயை வைத்து அதிகமாக முகந்து முத்த மிட்டுச் சரீரத்தின் கண்ணுள்ள உரோமங்களானவை சிலிர்க்கும்படி பருத்து விரும்பி என்னைத் துதித்து நின்றார்.

 

2777. நன்னபி பெயர்கேட் டுள்ளக் களிநனி பெருகா நின்றா

     ரின்னவர் வரிசை மேலோ ரென்பதை யிதயத் தெண்ணிப்

     பின்னொரு மொழிகொ டாம லிவர்கரம் பிடித்து வல்லே

     பொன்னடி யடைந்தே னென்றார் சூழ்ச்சியும் பொறையு மிக்கார்.

10

      (இ-ள்) அன்றியும், நுண்ணிய ஞானமும் பொறுமையும் மிகுந்தவர்களான அந்த அம்மா றென்பவர், நன்மை பொருந்திய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் திரு நாமத்தைக் கேள்வி யுற்று இதயத்திற் சந்தோஷமானது மிகவும் ஓங்கும்படி நின்றவாராகிய இவர் சங்கையினது மேன்மையை யுடையவரென்பதை எனது சிந்தையின் கண் சிந்தித்து வேறொரு வார்த்தையுஞ் சொல்லாமல் இவரின் கைகளைப் பற்றி விரைவிற் கூட்டிக் கொண்டு பொன்னைப் போன்ற உங்களின் பாதங்களினிடத்து வந்து சேர்ந்தே னென்று சொன்னார்கள்.

 

2778. இசைத்தநன் மொழிகேட் டந்த யிளவலை யினிது கூவித்

    திசைத்தல மியாண்டி யாவன் சேயுனக் கிடுபே ரியாது

     விசைத்திவ ணடைந்த வாறும் விளம்பெனக் குரிசில் கூற

     நசைத்தடக் குணக்குன் றன்னா னினியன நவில லுற்றான்.

11