இரண்டாம் பாகம்
(இ-ள்) எப்
பொருட்கு மிறைவ ராகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் அந்த அம்மா றென்பவர் அவ்வாறு சொல்லிய நன்மை பொருந்திய வார்த்தைகளைக்
கேள்வி யுற்று அவ்விளம் பிராயத்தையுடைய சிறுவனை இனிமை யுடனழைத்து நீ யுறையுந் திசையினது இடம்
எவ்விடம்? நீ யாருடைய புதல்வன்? உனக்கிட்ட பெயர் யாது? நீ வேக முற்று இங்கு வந்து சேர்ந்த
வரலாற்றையுங் கூறென்று கேட்க, அன்பினது பெருமையையுடைய குணத்தின் மலையை யொத்தவனான அவன் இத்
தன்மைத் தான வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தான்.
2779.
வானவ ரேவல் பூண மானிட வடிவாய் வந்த
தானவ அரசு செய்யத் தவமுயன் றழகு பெற்ற
கோனகர் மதீனத் துற்ற சூதர்கள் குழுஉக்கொண் டேத்து
மீனமின் மறைகள் வல்ல பண்டித னெந்தை மன்னோ.
12
(இ-ள்) தேவர்களான
மலாயிக்கத்து மார்கள் பணிவிடை கொள்ளும் வண்ணம் மானுஷிய தோற்றமாய் இவ் வுலகத்தின் கண்
அவதரித்த தானவ ராகிய நபிகட் பெருமானே! எனது பிதா, நீங்கள் அரசு புரியும் படி தவத்தைச் செய்து
சுந்தரத்தை யடைந்த இராஜ பட்டினமாகிய திரு மதீனமா நகரத்திற் பொருந்திய யூத ஜாதியினர் கூட்டங்
கொண்டு துதிக்கா நிற்கும் களங்க மற்ற வேதங்களில் வல்லைமையையுடைய பண்டிதன்.
2780.
எந்தையு மாயும் பன்னா ளியற்றிய தவத்தால் வந்த
சந்ததி யென்ன வேறு தனையரில் லாது நாளும்
புந்தியி னுவகை கூரப் போற்றிநற் புராணந் தேர்ந்து
நந்தலில் கபுகா பென்னு நாமமு நவின்றிட் டாரால்.
13
(இ-ள்) எனது பிதாவும்
மாதாவும் பல காலம் புரிந்த தவத்தினால் இவ் வுலகத்தினிடத்து அவதரித்த மதலைக ளென்று வேறே
புத்திரர்களில்லாது பிரதி தினமும் சிந்தையின் கண் விருப்பமான ததிகரிக்கும் வண்ணம் துதித்து
நன்மை பொருந்திய புராணங்களைத் தெளிந்து கெடுதலற்ற கபுகாபென்று சொல்லும் அபிதானமும் எனக்குக்
கூறினார்கள்.
2781.
உத்தமர் செல்வம் போன்று முளத்தணு மாசொன் றில்லாப்
பத்தியர் தவமே போன்றும் பகரரும் விசும்பிற் றோன்றுஞ்
சித்திர மதியம் போன்றுஞ் செவ்விய ரிருவ ராவி
வைத்ததோ ருடம்பு போன்று நாட்குநாள் வளர்த்திட் டாரால்.
14
(இ-ள்) அன்றியும்,
என்னைச் சற் குணத்தோர்களின் ஆக்கத்தை நிகர்த்தும், இருதயத்தின் கண் அணுப் போலும் ஓர்
குற்றமு
|