இரண்டாம் பாகம்
மில்லாத ஒழுக்கத்தை யுடையோர்களின்
தவத்தை நிகர்த்தும், சொல்லுதற் கருமையான ஆகாயத்தினிடத்து உதய மாகாநிற்கும் பேரழகை யுடைய
சந்திரனை நிகர்த்தும், சுந்தரத்தை யுடையவர்களான எனது தாய், தந்தையர்களாகிய இருவர்களின்
பிராணனை வைத்த ஓர் தேகத்தை நிகர்த்தும், நாட்கு நாள் வளர்த்தார்கள்.
2782.
பேதமை யகற்றிப் புந்திப் பெருக்கெடுத் தொழுகல் செய்யும்
வேதவா சகம்பு ராண காவிய விதிக ளியாவு
மோதென வோதி வித்தென் னுளத்தினுக் கியைந்த தாகப்
போதரச் செய்து நின்றார் பொருவிலா வண்ணத் தன்றே.
15
(இ-ள்) அவ்வாறு வளர்த்து எனது அறியாமையை யொழித்து அறிவினது பெருக்கை எடுத்து சிந்தச் செய்யும்
எல்லா வேத வசனங்களையும் புராண காவியங்களின் அறிவுகளையும், கற்பாயாக வென்று கற்பித்து எனது
இதயத்திற்குப் பொருந்தியதாகப் போதரும் படி ஒப்பில்லாத விதத்தில் செய்து நின்றார்கள்.
2783.
முன்னவ ரோதும் வேத மூன்றினுந் தெரிந்த நூல்கள்
பன்னெறி ஞான நூல்க ளினையன பலவுந் தொக்க
மின்னவிர் பேழை நூற்றின் மேலுமுண் டருங்காப் பின்றி
யென்னுளம் பொருந்து நூன்மற் றெவையவை தெருள்வன் மன்னோ.
16
(இ-ள்) அவ்விதம் செய்து
நிற்க, எனத வீட்டில் முன்னோர்கள் கூறிய தௌறாத்து, இஞ்சீல், சபூ றென்னும் மூன்று வேதங்களிலும்
ஆராய்ந் தெடுத்த கிரந்தங்களும் பல ஒழங்குகளை யுடைய ஞான கிரந்தங்களுமாகிய இப்படிப் பட்டவைகள்
பலவும் அடங்கிய பிரகாசியா நிற்கும் ஒளிவைக் கொண்ட பெட்டிகள் அரிய காப்பில்லாமல் நூற்றிற்கு
மேலு முள்ளன. அவற்றில் யான் எனது மனமான திசையப் பெறும் நூற்கள் எவையோ? அவற்றை எடுத்து
வாசித்துத் தெளிவேன்.
2784.
நாடெறும் கருத்தீ தல்லால் வேறொரு நாட்ட மில்லேன்
வீடுறைந் தோர்நா ளோர்பால் விரிகதிர் மணியிற் செய்த
மோடுயர் பேழைப் பூட்டின் முத்திரை விடுத்து வல்லே
தேடினன் கண்ணிற் காணாச் செய்யுளின் விருப்பத் தன்றே.
17
(இ-ள்) பிரதி தினமும்
எனக்குச் சிந்தனையான திதுவேயல்லாமல் யான் வேறொன்றையும் நாடிலேன். ஒரு நாள் எனது வீட்டின்
கண்ணிருந்து ஓர் சார்பினிடத்து விரிந்த பிரகாசத்தைக்
|