முதற்பாகம்
அந்தப் பெண்கள்
எங்களு ளொருவராகிலும் அவ்வாமினாவின் வீட்டில் புகுவது ஒருகாலத்திலு மில்லையென்று
மறுத்துரைத்தார்கள்.
233. மஞ்சு வாழ்குழ லாமினா வுரைத்தது மறுத்தா
ரின்சொற் கூறிநா மழைக்கவு மனமிரங் கிலரென்
றஞ்சி யுள்ளகம்
புழுங்கிநின் றப்துல்முத் தலிபு
தஞ்ச மீதெனக்
கஃபத்துல் லாதனைச் சார்ந்தார்.
68
(இ-ள்) அப்பெண்கள் வருதற்கு
மறுத்தமாத்திரத்தில், அப்துல் முத்தலிபானவர்கள் இவ்வூர்ப்பெண்கள் அழகு குடியிருக்குங்
கூந்தலையுடைய ஆமினா அவர்கள் சொன்ன சொல்லையும் மறுத்தார்கள், அன்றியும் இனிமையான
சொற்களைக் கூறி நாம் அழைக்க அதற்கும் மனமிரங்கினாரில்லரென்று அச்சமுற்று மனத்தினுட்
புழுக்கமாகி நின்று இனி நமக்குத்துணை யிதுதானென்று கஃபத்துல்லாவுக்கு வந்தார்கள்.
234. வடிவி
ருந்தொளிர் கஃபத்துல் லாதனை வலமாய்க்
கடிதிற் றுன்புற
வருங்கரு மாரியின் களையாற்
கொடியி டைப்பர
தாபமும் வருத்தமுங் கூறி
நெடிது
யிர்த்தயர்ந் திரந்துகொண் டிருக்குமந் நேரம்.
69
(இ-ள்) அங்ஙனம் வந்த அப்துல்
முத்தலிபானவர்கள் அழகானது மாறாது குடியிருந்து பிரகாசியாநிற்கும் கஃபத்துல்லாவைப்
பிரதக்கணமாய் வந்து துன்பத்தைப் பொருந்த விரைவினில்வரும் பிரசவவேதனையால் கொடிபோலும்
இடையினையுடைய ஆமினா அவர்களுக்கு உண்டாகும் பரிதாபத்தையும் வருத்தத்தையுஞ் சொல்லி நெடுமூச்சு
விட்டுக் களைத்துப் பிராத்தித்துக் கொண்டிருக்கின்ற அந்த நேரத்தில்.
எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
235. அரியமெய்ப் பொருளா யளவிடற் கரியோ
னருளின னமரர்கள் சுவர்க்கத்
தெரிவையர்
பறவைக் குலங்கண்மற் றெவையுஞ்
செழும்பொழிற் செகதலத் திறங்கி
வரிஞிமி
றுதறிக் கருங்குழன் முடித்த
மடக்கொடி ஆமினா மனையி
னிரைநிரை
செறிந்தங் கவருரை மறாது
நின்றிடும் பணிவிடைக் கெனவே.
70
(இ-ள்) கிடைத்தற் கரிதான
சத்தியவத்துவாய் இன்னபடி யென்றளவிடற் கருமையானோனாகிய ஹக்குசுபுகானகுவத்த ஆலாவானவன்
வானவர்களையும், சுவர்க்கத்துப் பெண்களாகிய
|