பக்கம் எண் :

சீறாப்புராணம்

1047


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அன்றியும், இந்தப் பூமியின் கண் அந்தக் கசப்பல்லாமல் வேறு கசப்பு மில்லை. சத்தத்தைக் கொண்ட பெருமை பொருந்திய சமுத்திரத்தினது ஜலமே என்னிடத்தில் கொண்டு வந்து வைத்த உப்பை யுடைய அந்த ஜலத்திற்கு உவமானமென்று குற்ற மற்ற நல்ல பசியானது எனக்கு மேற் கொண்டும் அவற்றைப் புசிக்கப் பொருந்தாமல் களங்கத்தைப் பொருந்திய அந்தகாரத்தில் ஏகமாகவிருந்து யான் துன்ப முற்றேன்.

 

2835. இருளடை மனையின் முன்ன ரிருந்தபா ளிதத்தை யேந்திப்

     பரிவினல் லமுத மாகத் தருகெனப் பணிந்து நீங்கா

     வரிசைநந் நபியே நும்பேர் பற்பல்கால் வழுத்தி வாழ்த்தி

     யரிதினிற் கலிமா வோதி யங்கையா லருந்தி னேனால்.

68

      (இ-ள்) அவ்வாறு துன்பமுற்று மாறாத வரிசையை யுடைய நமது நபிகட் பெருமானே! யான் அந்தகார மடைந்த அந்தப் பாழ் வீட்டின் கண் எனது முன்னா லிருந்த அவ் வன்னத்தைக் கைகளாற் றாங்கி அன்போடும் நல்ல அன்னமாகத் தருவீர்களாக வென்று வணங்கி உங்களது திரு நாமத்தைப் பற்பல தடவை சொல்லித் துதித்து அருமையுடன் ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர்ற சூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவைக் கூறி அழகிய கையினாலெடுத்துப் புசித்தேன்.

 

2836. வானகத் தமுத மென்பால் வந்ததோ மதுர மூறித்

     தேனினு மினிதாய் வாசந் திகழ்ந்தன வுவர்நீ ராலைப்

     பானமும் பொருவா வண்ண முருசிக்கும் படிக்கும் வாய்ந்த

     தானமு முண்ண வுண்ணப் பொலிந்தன தமியற் கன்றே.

69

      (இ-ள்) அவ்வாறு புசிக்க, தேவ லோகத்தின் கண்ணுள்ள அமிர்தம் என்னிடத்தில் வந்து சேர்ந்ததோ? என்று இனிமை யானது சுரக்கப் பெற்றுத் தேனைப் பார்க்கிலும் இன்பத்தை யுடையதாய் வாசனை யானது பரிமளித்தது. அந்த உவரைக் கொண்ட ஜலம் ஆலையினது சாறும் ஒப்பாகாத விதத்தில் இனிக்கும் படிக்கும் சிறந்தது. அந்தத் தானமும் அருந்த அருந்தத் தமியே னாகிய எனக்குப் பொலிவுற்றது.

 

2837. ஒருபிடி யமுத முட்கொண் டுவரிழி நீரும் வாயாற்

     பருகிடி னிரப்ப மாகிப் பத்துநாட் பசித்தி டாது

     பிரிவிலிவ் வண்ணஞ் சின்னா ளுண்டுமெய் பெரிது பூரித்

     தருளொடு மிருந்தேன் றாதை யிடுஞ்சிறை யறையி லன்றே.

70

      (இ-ள்) அன்றியும், யான் ஒரு பிடி அமுதத்தை அருந்தி உவரான திறங்கப் பெற்ற அந்த ஜலத்தையும் வாயாற் குடிக்கில் எனக்கு