பக்கம் எண் :

சீறாப்புராணம்

1052


இரண்டாம் பாகம்
 

அழகையு முடைய இவ்வுலக மானது துதிக்கும் தேவர்களாகிய மலாயிக்கத்து மார்களின் இராஜரான அஜ்ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் கூறுவார்கள்.

 

2850. உலகிடத் தினில்அய் யூபென் றோதிய நபியு மெண்ணெண்

     கலைதெரி கபுகா பென்னுங் காளையுஞ் சமான மாக

     நிலைபெற வமைத்தே னென்ன விறையவ னிகழ்த்தி னானென்

     றிலகிய வள்ளற் கோதி சபுறயீ லேகி னாரால்.

83

      (இ-ள்) அந்த ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் இறைவனான ஜல்ல ஜலாலகு வத்த ஆலாவானவன் இப் பூமியின் கண் அய்யூ பலைகிஸ்ஸலா மென்று கூறும் நபியும் அறுபத்தி நான்கு கலைக்கியானமு முணர்ந்த கபுகா பென்று சொல்லும் காளைப் பருவத்தை யுடையவரும் சமமாக நிலை பெறும் வண்ணம் படைத்தே னென்று கற்பித்தானெனப் பிரகாசியா நிற்கும் வள்ளலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குக் கூறி வான லோகத்தின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

2851. விண்ணவர்க் கரசர் கூறு மெய்மொழி யெவர்க்குங் கூறிக்

     கண்ணெனுங் கபுகா பென்னுங் காளையைத் தழுவிப் போற்றி

     நண்ணிமுன் கொணர்ந்து விட்ட நாயகர் தமையும் வாழ்த்தி

     மண்ணினுக் கழகு வாய்ந்த முகம்மது மகிழ்ந் திருந்தார்.

84

      (இ-ள்) இவ் வுலகத்திற்கு அழகாய் வாய்க்கப் பெற்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தேவர்களாகிய மலாயிக்கத்து மார்களுக்கு மன்னவரான ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்கள் அவ்வாறு சொல்லிய சத்திய வசனங்களை யாவர்கட்குஞ் சொல்லிக் கண் ணெனக் கூறா நிற்கும் கபுகா பென்று சொல்லும் காளைப் பருவத்தை யுடையவரைக் கட்டி யணைத்துத் துதித்து அவரை நெருங்கித் தங்களின் சந்நிதானத்திற் கொண்டு வந்து விட்ட நாயகராகிய அந்த அம்மா றென்பவரையும் புகழ்ந்து சந்தோட மடைந் திருந்தார்கள்.