பக்கம் எண் :

சீறாப்புராணம்

1069


இரண்டாம் பாகம்
 

     விடுத்தனன் பரலான் மெலமெல நடந்தோர்

          விரிமலர்ச் சினைத்தரு நிழலி

     லடுத்தன னிருந்தான் கானினிற் றொடர்ந்த

          வருந்தவிப் பாறுதற் கன்றே.

17

      (இ-ள்) அன்றியும், கைகளிற் பெரிய கற்களை யெடுத்து விண்ணென்று ஓட்டி வீசிக் கூவிக் கொம்பினா லடித்து அவ் வாட்டைத் தனது கையினிடத் தாக்கி, அந்தப் புலியை ஒரு பக்கத்திற் போக்கி விட்டுப் பரற் கற்களில் பையப் பைய நடந்து ஒப்பற்ற விரிந்த புஷ்பங்களினது கிளைகளை யுடைய ஒரு மரத்தினது நிழலிற் போய் அடுத்துக் காட்டின் கண் அப் புலியைப் பின்பற்றிச் சென்ற அரிய இளைப்பானது தணிவதற்காய் அவ்விடத்தி லிருந்தான்.

  

2884. மையினை விடுத்த கொடிப்புலி யடுத்த

          வரைப்புறத் துச்சியி னேறிக்

    கையினிற் றரித்த கோலோடு மிருந்த

          தொறுவனைக் கடிதினி னோக்கி

     வெய்யவா விறையோ னின்றெனக் களித்த

          பொசிப்பினை விரும்பினால் வேறு

     செய்யவு நினக்குத் தகுவதோ வென்னத்

          தெளிவுட னுரைத்துநின் றதுவே.

18

      (இ-ள்) அவன் அவ்வா றிருக்க, அவ்வாட்டை விட்ட அந்தக் கொடிப்புலி யானது சமீபத்தில் நெருங்கிய ஒரு மலையினது சிகரத்தின் கண் ஏறிக் கையிற்றாங்கிய கொம்புட னிருந்த இடையனாகிய அந்த உகுபா னென்பவனை விரைவிற் பார்த்துக் கொடியவனே! இறையவனாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் இன்றையத் தினம் எனக்குக் கொடுத்த உணவை யான் ஆசித்தால் நீ அதை மறுத்து வேறு காரியத்தைப் புரிவதும் உனக்குத் தகுமா? தகா தென்று தெளிவோடுங் கூறி நின்றது.

 

2885. மலிதரு மொழிகேட் டெண்டிசை யிடத்து

          மாசற நோக்கினன் பொருவா

     தொலிசெவிக் கறிவாய்ப் புகுந்தது மாந்த

          ரொருவரு மிவணிலை யீதோர்

     கலியெனத் திகைக்கும் போதினி லியானே

          கழறின னெனமறுத் துரைப்பப்

     புலிபகர்ந் திடுத லறப்பெரும் புதுமை

          புதுமையென் றகத்ததி சயித்தான்.

19

(இ-ள்) அவ்வாறு கூறிய பெருகிய அந்த வார்த்தைகளை அவ்வுகுபா னென்பவன் காதுகளினாற் கேள்வி யுற்றுக்