இரண்டாம் பாகம்
களங்கமின்றி எண்டிசைகளினிடத்தும்
பார்த்து இந்தச் சத்தமானது ஒப்பின்றி நமது காதுகளுக்கு அறிவாக வந்து நுழைந்தது. இவ்விடத்தில்
மனுஷியர்க ளொருவரு மில்லர். இஃது ஓர் வஞ்சக மென்று சொல்லிப் பிரமிக்குஞ் சமயத்தில் அப்
புலியானது யான்றான் பேசினேனென்று மீண்டுஞ் சொல்ல, அவன் புலி பேசுவது மிகவும் பெரிய ஆச்சரியம்!
ஆச்சரியம்!! என்று சொல்லித் தனது மனதின் கண் ஆச்சரியப்பட்டான்.
2886.
எண்டிசை யிடத்துந் தொறுவரைக் கூவி
யாவரு மிவணிடம் புகுமின்
கண்டறி யாதோர் பெரியகா ரணத்தைக்
காண்மின்கள் பொருப்பிடைக் கிடந்து
கொண்டொரு புலியென் னெதிரினி லறிவாய்க்
கூறிய மொழிசெக தலத்தும்
விண்டலந் தனினுங் காண்பரி தென்ன
விரைவொடு முரைத்துநின் றனனால்.
20
(இ-ள்) அன்றியும்,
அவன் எண்டிசைகளி னிடத்தும் முள்ள இடையர்களை அழைத்து அனைவரும் இவ்விடத்தில் வாருங்கள். நீங்கள்
பார்த் துணராத ஒப்பற்ற பெரிய ஓ ராச்சிரியத்தைப் பாருங்கள். ஒரு புலியானது மலையின் கண் கிடந்து
கொண்டு எனது முன்னர் அறிவாகப் பேசிய வார்த்தைகளை இப் பூலோகத்தின் கண்ணும் வானலோகத்தின்
கண்ணும் காணக் கூடா தென்று வேகத் தோடும் கூறி நின்றான்.
2887.
வூயர்க ளறிய விலங்கின முரைத்த
ததிசய மதிசய மென்னக்
கூயபே ருவகைப் பொதுவனை நோக்கிக்
கொடிப்புலி மறுத்தும்வாய் திறந்து
மாயிரும் புவியி னியானெடுத் துரைத்த
மாற்றமே புதுமையென் றுரைத்தாய்
தூயநற் பெருமைப் புதுமையொன் றுளதிங்
கிதனினுங் கேளெனச் சொல்லும்.
21
(இ-ள்) அந்த இடையர்களுணரும்
வண்ணம் மிருகச் சாதியாகிய புலியானது பேசினது ஆச்சரியம்! ஆச்சரியம்!! என்று அவ்வாறு சத்தமிட்ட
பெரிய களிப்பை யுடைய அந்த உகுபா னென்னு மிடையனை அந்தக் கொடிப் புலியானது பார்த்து மீண்டுந்
தனது வாயைப் பிளந்து நீ செல்வத்தையும் பெருமையையு முடைய இப்பூமியின் கண் யானெடுத்துக் கூறிய
வார்த்தைகளை ஆச்சரிய மென்று கூறினாய். இங்கு இதைப் பார்க்கிலும் பரிசுத்தத்தைக் கொண்ட
நன்மையினது பெருமையையுடைய
|