இரண்டாம் பாகம்
ஓராச்சரிய மான துள்ளது.
அஃதைக் கேட்பா யாக வென்று கூறா நிற்கும்.
2888.
மக்கமா நகர்விட் டணிமனை மதீனா
நகரினின் முகம்மது நயினார்
புக்கின ரவர்சொ லுண்மையென் றீமான்
கொண்டுளம் பொருந்தித்தீ னிலையை
கைக்கொளா திருத்தல் புதுமையே யன்றிக்
கானிடை விலங்கின மொழிவ
திக்கணம் புதுமை யெனவெடுத் திசைத்த
லேழமை யெனவுரைத் தகன்ற.
22
(இ-ள்) ஆண்டவர்களாகிய
நாயகம் நபிகட் பெரமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் திரு
மக்கமா நகரத்தை விடுத்து அழகிய மாளிகைகளையுடைய திருமதீனமா நகரத்தின் கண் வந்து சேர்ந்தார்கள்.
நீ அந் நபிகட் பெருமானவர்களின் வார்த்தைகளைச் சத்தியமென்று மனமுடன்பட்டு ஈமான் கொண்டு
தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தின் நிலைமையைக் கைக் கொள்ளா திருப்பது ஆச்சரியமே
யல்லாமல் இப்போது கானகத்தினிடத்து மிருகச் சாதியாகிய யான் கூறிய வார்த்தைகளை ஆச்சரியமென்று
எடுத்துச் சொல்லியது உனது ஏழமைத் தனமென்று புகன்று போய் விட்டது.
2889.
புடவியின் மாந்த ரெனச்சட மெடுத்தோ
ரேவலும் விலகலும் பொருந்தல்
கடவதே யன்றி விலங்கின மறிந்து
கழறுத லறிகிலோ மென்னின்
மடமையின் மடமை யெனமனத் திருத்தி
வன்குபி ரகற்றிநல் லுணர்வு
நடைதர நடந்தீ மானெறி தோன்ற
நபிகணா யகமிடத் தடைந்தான்.
23
(இ-ள்) அஃதவ்வாறு
போக, அந்த உகுபா னென்பவன் இப்பூமியின்கண் மானுஷிய ரென் றுடலை எடுத்தவர்கள் ஏவலையும், விலகலையும்
பொருந்திக் கொள்வது முறைமையே யல்லாமல் மிருகச் சாதியாகிய புலியானது தெரிந்து கூறுவதை யுணர்ந்திலோ
மென்று சொல்லில், அஃது அறியாமையிலும் அறியாமை யாகு மென்று தனதிதயத்தின் கண் ணிருக்கும்படி
செய்து கொடிய தனது குபிர் மார்க்கத்தை யொழித்து நல்ல அறிவானது நிகழ் பெற நடந்து ஈமானின்
ஒழுங்குக ளானவை உதய மாகும் வண்ணம் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
|