பக்கம் எண் :

சீறாப்புராணம்

1072


இரண்டாம் பாகம்
 

முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினிடத்தில் வந்து சேர்ந்தான்.

 

2890. விலங்கினங் காத்து விலங்கினும் விலங்காய்த்

          திரிந்தனன் மெய்மறை முதியோர்

     குலங்களு மறியே னின்றுநும் பொருட்டாற்

          கொடிப்புலி கானகத் துரைத்த

     நலங்கெழு மறிவாற் குபிரினை யகற்றி

          நன்னெறி தீனினைப் பிடித்துப்

     பலன்களும் படைத்தீ மானிலை நின்றே

          னெனமலர்ப் பதம்பணிந் தனனால்.

24

      (இ-ள்) அவ்வாறு வந்த அவன் யான் மிருகச் சாதியாகிய ஆட்டுக் கூட்டங்களைக் காவல் செய்து மிருகத்திலும் மிருகமாகத் திரிந்தேன். உண்மையை யுடைய வேதத்தினது மூத்தோர்களின் கூட்டங்களையு முணரேன். இன்றையத் தினம் உங்களது ஏதுவால் காட்டின் கண் ஓர் கொடிப் புலி கூறிய நன்மை யானது நிறையப் பெற்ற அறிவினால் எனது குபிர் மார்க்கத்தை யொழித்து நல்ல ஒழுங்கை யுடைய தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தைப் பற்றிப் புண்ணியங்களையும் பெற்று ஈமானினது நிலைமையில் நின்றேனென்று சொல்லி அந் நபிகட் பெருமானவர்களின் தாமரைப் புட்பத்தை நிகர்த்த பாதங்களில் வணங்கினான்.

 

2891. விண்டகத் துரைத்த கொடிப்புலி குருவாய்

          மேலவன் விதிமறை யீமான்

     கொண்டன னுகுபா னெனப்பலர் குழுமிப்

          புகழ்ந்திடக் கொண்டலைப் போற்றி

     வண்டிமி ரலங்கன் மன்னவ ரெவர்க்கு

          மனமகிழ் தரசலா முரைத்துத்

     தெண்டிரை யொலியின் மத்தொலி கறங்கு

          மாயர்தஞ் சேரியிற் புக்கான்.

25

      (இ-ள்) அன்றியும், அவ் வுகுபா னென்பவன் மலையினிடத்துக் கூறிய கொடிப் புலியே குருவாக மேன்மையை யுடையவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் விதித்த புறுக்கானுல் அலீமென்னும் வேதத்தினது ஈமானைக் கொண்டா னென்று பலரும் ஒன்று சேர்ந்து துதிக்கும் வண்ணம் மேகமாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் புகழ்ந்து வண்டுகள் மொய்க்கா நிற்கும் பூ மாலையை யணிந்த அரசர்களான அசுஹாபிமார்க ளனைவர்க்கும்