பக்கம் எண் :

சீறாப்புராணம்

1086


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவர்கள் அவ்வாறு கூற, யான் எனது இதயத்தின் கண் பிறிதொரு சிந்தையுமில்லை. நல்ல மனத்தோடும் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்கு ஈமான் கொள்ளுவதற்கு இசைந்தேன். நீங்கள் என்னை விரும்பி உங்களது கொடிய மன வெண்ணத்தை நீக்கி என்னை ஓர் மார்க்கத்தினுட் படுத்துவீர்களே யானால் உங்களது வார்த்தைகளை யான் மறுக்க மாட்டேன். அதைச் சொல்லுங்க ளென்று சுருக்கிக் கூறினேன்.

 

2922. நன்று நன்றெனச் சிரமசைத் தனைவரு நலியா

     தின்று தொட்டுமுந் நூற்றினிற் குறைந்திடா தீத்தங்

     கன்று வைத்துநீ ரிறைத்தவை பலன்படக் காய்த்து

     நின்ற வண்பொழி லாக்கிநீ யளிப்பது மல்லால்.

31

      (இ-ள்) யான் அவ்விதங் கூற, அவர்களி யாவரும் நல்லது! நல்லது!! என்று தங்களின் தலைகளை ஆட்டி நீ இன்று முதல் மெலிதலின்றி முந்நூ றென்னு மெண்ணிற் குறையாமல் ஈத்த மரத்தினது கன்றுகளை நட்டு அவற்றிற்குச் சலமிறைத்து அவைகளைப் பல னுண்டாகும் வண்ணம் காய்த்து நிற்கின்ற அழகிய சோலையாகச் செய்து தருவது மல்லாமல்.

 

2923. ஆயி ரத்திரு நூற்றின்மே லைம்பதி னளவி

     னேய தானவி ராகனென் றோதிய வெடையின்

     றூய தங்கமு மளித்தியேற் றூதரென் பவர்பாற்

     போயீ மான்கொளத் துணிவது துணிவெனப் புகன்றார்.

32

      (இ-ள்) ஆயிரத்திரு நூற்றி யைம்பதி னளவிற் பொருந்திய தான விராக னென்று கூறும் நிறையில் பரிசுத்தத்தையுடைய தங்கமுந் தருவாயே யானால் நீ றசூலென்று சொல்லப்பட்டவரான அந்த முகம்ம தென்பவரினிடத்திற் சென்று ஈமான் கொள்ளுவதற்கு முயல்வது திடனாகு மென்று சொன்னார்கள்.

 

2924. இன்ன வாசக மிசைத்தவ ரிதயங்கட் கேற்ப

     நன்ன யத்தொடுஞ் சிலமொழி நவின்றவ ணீங்கி

     மன்னர் மன்னவ நும்பத மடைந்தனன் மனத்தி

     லுன்னி யேற்பவை யெற்குரைத் திடுகவென் றுரைத்தான்.

33

      (இ-ள்) இராஜாதி ராஜ ராகிய நபிகட் பெருமானே! இந்த வார்த்தைகளைக் கூறிய அவர்களின் மனங்கட்குப் பொருந்தும் வண்ணம் நல்ல உபசாரத் தோடும் சில வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லி அவ்விடத்தை விட்டு மகன்று உங்களது திருவடிகளில் வந்து சேர்ந்தேன். ஆதலால் தாங்கள் இஃதைச்