பக்கம் எண் :

சீறாப்புராணம்

1088


இரண்டாம் பாகம்
 

2928. மன்னு நந்நபி புரைத்தலுங் களிப்புடன் வாழ்த்தி

     முன்னு ரைத்திவண் விடுத்தவ ரிடத்தினின் முன்னிச்

     சொன்ன சொன்னமுந் துடவையு மவதியி லளிப்பே

     னென்ன வோர்முறி யெழுதியங் கவர்கரத் தீந்தான்.

37

      (இ-ள்) நிலை பெற்ற நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு கூறிய மாத்திரத்தில், அவன் அவர்களை மகிழ்ச்சி யோடுந் துதித்து ஆதியிற் கூறித் தன்னை இங்கு விட்டவர்க ளாகிய அவர்களிடத்தில் போயணுகி நீங்கள் கேட்ட தங்கமும் ஈத்த மரச் சோலையும் ஓ ரவதியில் தருவே னென்று ஒரு கைச் சீட்டு டெழுதி அவ்விடத்தில் அன்னவர்களின் கைகளிற் கொடுத்தான்.

 

2929. மருங்கு நின்றசல் மான்றனை நோக்கிநீ வரைந்து

     தருங்க டுத்தமுந் தந்தனை யுனக்குறுஞ் சார்பி

     னிருங்கு லத்தவர்க் குரைத்தெமக் கீதலு மியற்றி

     யருங்க ணத்திசு லாமினில் வழிப்படென் றறைந்தார்.

38

      (இ-ள்) அவ்வாறு கொடுத்துப் பக்கத்தில் நின்ற அந்தச் சல்மானென்பவனை அவர்கள் பார்த்து நீ எழுதித் தரா நிற்குங் கைச் சீட்டையும் எழுதித் தந்தாய், உனக்குப் பொருந்திய சார்பில் உனது பெருமையை யுடைய கூட்டத்தார்களுக்கு உன் வரலாற்றைக் கூறி எங்களுக்குத் தர வேண்டியனவும் தந்து முடித்து அருமை யான கூட்டத்தை யுடைய தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்திற் போய் வழிபடுவாயாக வென்று கூறினார்கள்.

 

2930. தண்ட ளிர்ப்பொழிற் பாரிசின் விலையெனத் தலைநாட்

     கொண்ட பேரிடம் விடுத்துநந் நபியிடங் குறுகிப்

     பண்டு ரைத்தவப் படிமுறைப் பத்திர மெழுதி

     விண்ட ளித்தன னெனவுரைத் தனன்புகழ் விறலோன்.

39

      (இ-ள்) அவர்கள் அவ்விதங் கூற, கீர்த்தியையும் வெற்றியையுமுடையவனான அந்தச் சல்மா னென்பவன் குளிர்ந்த கிளைகளைக் கொண்ட சோலைகளை யுடைய பாரிசு நகரத்தில் தன்னைக் கிரய மென முன்னாளிற் பெற்றவர்களான அவர்களிடத்தே விட்டும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகி வசல்ல மவர்கள் பால் வந்து சேர்ந்து ஆதியிற் சொல்லிய அந்தப் பிரகாரம் ஒழுங்கை யுடைய கைச் சீட்டை வரைந்து அதன் வண்ணம் தந்து முடிக்கிறே னென்று சொல்லிக் கொடுத்தே னென்று சொன்னான்.