பக்கம் எண் :

சீறாப்புராணம்

11


முதற்பாகம்
 

துரையுமான, அபூபக்கரை புகல்வாம் - அபூபக்கர் சித்தீகு றலியல்லாகு அன்கு அவர்களை யாம் துதிப்பாம்.

 

பொழிப்புரை

     கழுத்தணியின் கயிற்றையும் மதங்களையு முடைய யானைகளினது படை வகுப்புகளின் நிலைமையான தறும்படி காபிர்களின் பூமிகளை முட்டும் வண்ணம் பிரயோகித்து ஷறகில் பொருந்திய நல்ல கதியினது சன் மார்க்கத்தில் அவர்களை நுழைவித்து மேலான தலைமைத்தனத்திற்கு வைத்த பெருமையை யுடையவரும் தேன் மாரியினது துளிகள் சிதறுத லுற்றுக் கிடக்கும் இரு மாலைகளைக் கொண்ட தோள்களை யுடையவர்களான நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் அரசுக்கு வைக்கப்பெற்ற ஒழுங்கினது சங்கைக்கு மிகுந்த துரையுமான அபூபக்கர் சித்தீகு றிலியல்லாகு அன்கு அவர்களை யாம் துதிப்பாம்.

 

வேறு

 

     10. அமரிலெதிர்த் தோர்களாவி யெமதிசையைத் தேடியோட

             வருடமடற் சூர வீரவேள்

        மமதைகெடச் சாதிநீதி முறைமைதனக் காகவோது

             மகனைவதைத் தோரொ றாமலே

        திமிரபகைப் பானுமேனி கருகிவிடப் பார்வையேவு

             தெரிமறையிற் கார ணீகனா

        ருமறுதிருத் தாளைநாளு மனதினினைத் தோதுவோர்தம்

             முரியதவப் பேறு மீறுமே.

10

பதவுரை 

     அமரில் எதிர்த்தோர்கள் ஆவி - யுத்தத்திலெதிர்த்த சத்துராதிகளின் ஜீவனானது, எமன் திசையை தேடி ஓட - அந்தகனின் திக்கை நாடி ஓடும் வண்ணம், அடரும் அடல் சூரம்வீரம் வேள் - பொருதா நிற்கும் வெற்றியினது வீரியத்தையும் பலத்தையு முடைய வேளும், சாதி நீதிமுறைமை தனக்கு ஆக - தமது சமயத்தின் நியாயத்தினது ஒழுங்கிற்காய், மமதைகெட - அகந்தையழியும்படி, ஓறாமலே ஓதும் மகனை வதைத்தோர் - குறையாமல் கூறுகின்றதங் குமாரனை வதைத்தவர்களும், திமிரபகைபானு - அந்தகாரத்தினது விரோதியான சூரியனின், மேனி கருகிவிட - மேனியானது தீய, பார்வை ஏவு - நோக்கத்தை ஏவின, தெரிமறையின் காரணீகனார் - தெரிகின்ற வேதத்தினது காரணீகரு மாகிய, உமறு திருதாளை - உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு அவர்களின் தெய்வீகந் தங்கிய பாதங்களை, மனதில்