முதற்பாகம்
நினைத்து
ஓதுவோர்தம் - சிந்தையின்கண் சிந்தித்துத் துதிப்பவர்களின், உரிய தவம் பேறு மீறும் ஏ -
உரிமை யானதவத்தினது வாய்ப்பானது அதிகரியா நிற்கும்.
பொழிப்புரை
யுத்தத்திலெதிர்த்த சத்துராதிகளின்
ஜீவனானது அந்தகனின் திக்கை நாடி ஓடும் வண்ணம் பொருதாநிற்கும் நெற்றியினது வீரியத்தையும்
பலத்தையுமுடையவேளும் தமது சமயத்தின் நியாயத்தினது ஒழுங்கிற்காய் அகந்தை யழியும்படி குறையாமல்
கூறுகின்ற தங் குமாரனை வதைத்தவர்களும் அந்தகாரத்தினது விரோதியான சூரியனின் மேனியானது தீய
நோக்கத்தை ஏவின தெரிகின்ற வேதத்தினது காரணீகருமாகிய உமறு கத்தாபு றலியல்லாகு அன்கு
அவர்களின் தெய்வீகந் தங்கிய பாதங்களைச் சிந்தையின் கண் சிந்தித்துத் துதிப்பவர்களின்
உரிமையான தவத்தினது வாய்ப்பானது அதிகரியா நிற்கும்.
வேறு
11.
விதுமாற
வொளிவான வதனாதி நபிநாவில்
விளைவான திரு வேதமே
பதிவாக
வொருசேக ரமதாக நிலமீது
பயிராக வுரை தூவினோர்
சமுமாம
றையினோர்கள் பெரியோர்கள் சிறியோர்க
டமதாவி யென வாழுவோ
ருதுமானை
யொருகாலு மறவாம லிருகாலு
முளமீது நினை வாமரோ.
11
பதவுரை
விது மாற - சந்திரனானது மாறும்படி, ஒளிவு ஆன வதனம் - பிரகாசமான முகத்தை யுடைய, ஆதி - யாவற்றிற்கும்
முதன்மையனாகிய அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின், நபி - நபியாகிய நமது நாயகம் முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின், நாவில் விளைவு ஆன - நாக்கிலுற்பத்தி யாகிய, திரு
வேதமே - தெய்வீகம் தங்கிய ஆரணத்தை, பதிவு ஆக - பதிவாகவும், ஒரு சேகரம் அது ஆக - ஒரு
கூட்டமாகவும், நிலம் மீது - இவ்வுலகத்தின் மீது, பயிர் ஆக - பயிராகும்படி, உரை தூவினோர் -
வசனமாயெழுதினவரும், சதுமா மறையினோர் - மகத்தான நான்கு வேதத்தை யுடையவர்களும், பெரியோர்
- பெரியோர்களும், சிறியோர் - சிறியோர்களும், தமது ஆவி என வாழ்வோர் - தமது ஜீவனென்று
சொல்லும் வண்ணம் வாழ்ந்தவருமாகிய, உதுமானை - உதுமா
|