பக்கம் எண் :

சீறாப்புராணம்

13


முதற்பாகம்
 

னிபுனு அப்பான் றிலியல்லாகு அன்கு அவர்களை, ஒரு காலும் மறவாமல் - ஒருபோதும் மறக்காமல், இருகாலும் - அவர்களின் இரண்டு பாதங்களையும், மனமீது நினைவாம் - யாம் மனசின்கண் சிந்திப்பாம்.

 

பொழிப்புரை 

     சந்திரனானது மாறும்படி பிரகாசமான முகத்தை யுடைய, யாவற்றிற்கும் முதன்மையனாகிய அல்லாகு சுபுகானகு வத்தஆலாவின் நபியான நமது நாயகம் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களின் நாக்கிலுற்பத்தி யாகிய தெய்வீகந் தங்கிய ஆரணத்தை பதிவாகவும் ஒரு கூட்டமாகவும் இவ்வுலகத்தின் மீது பயிராகும்படி வசனமாயெழுதினவரும் மகத்தான நான்கு வேதத்தை உடையவர்களும் பெரியோர்களும் சிறியோர்களும் தமது ஜீவனென்று சொல்லும் வண்ணம் வாழ்ந்தவருமாகிய, உதுமா னிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு அவர்களை ஒருபோதும் மறக்காமல் அவர்களின் இரண்டு பாதங்களையும் யாம் மனசின்கண் சிந்திப்பாம். 

 

வேறு

 

     12. படிகிடு கிடெனநாக முடிநெறு நெறெனவாரி

            படுதிரை யளற தாகவே

       வடவரை யசையவான முகடுடை படவறாத

            மழைமுகில் சிதறி யோடவே

       யடையலர் கெடிகள்கோடி யிடிபடு படலதூளி

            யலரியி னுடலின் மூழ்கவே

       நடமிடு கடினவாசி மிசைவரு சமரசூர

            நரர்புலி யலியை யோதுவாம்.

12

பதவுரை 

     படி கிடுகிடு என - பூமியானது கிடுகிடெனவும், நாகம்முடிநெறுநெறு என - ஆதி சேடனது மகுடங்கள் நெறு நெறெனவும், வாரி படுதிரை அளறு அது ஆகவே - சலத்தைக் கொண்ட சமுத்திரமானது சேறாகவும், வடவரை அசைய - மகாமேரு பருப்பத மசையவும், வானம் முகடு உடைபட - வானத்தினது சிகர முடையவும், அறாத மழை முகில் சிதறி ஓட - ஒழியாத நீரையுடைய மேகங்கள் சிதறுண்டு ஓடவும், அடையலர் கெடிகள் கோடி - சத்து ராதிகளின் ஊர்கள் கோடியளவாக, இடிபடு படலம் தூளி - இடிபட்ட கூட்டமாகிய தூசிகள், அலரியின் உடலில் மூழ்கவே - சூரியனது மேனியில் முங்கவும், நடமிடு கடினம்வாசி மிசைவரும் - நடனமிடுகின்ற வன்மையை யுடைய