முதற்பாகம்
துல்து லென்னுங்
குதிரை மீது வராநிற்கும், சமர சூர நரர் புலி - யுத்த வீரியத்தினது, மாந்தர்களின் புலியான -
அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு அவர்களை யாம் துதிப்பாம்.
பொழிப்புரை
பூமியானது கிடுகிடெனவும் ஆதி சேடனது
மகுடங்கள் நெறு நெறெனவும் சலத்தைக் கொண்ட சமுத்திரமானது சேறாகவும் மகாமேருப் பருவத மசையவும்
வானத்தினது சிகரமுடையவும் ஒழியாத நீரையுடைய மேகங்கள் சிதறுண்டு ஓடவும் சத்துராதிகளின்
ஊர்கள் கோடி யளவாக இடிபட்ட கூட்டமாகிய தூசிகள் சூரியனது மேனியில் முங்கவும் நடனமிடுகின்ற
வன்மையுடைய துல்குலென்னுங் குதிரை மீது வராநிற்கும் யுத்த வீரியத்தினது மாந்தர்களின் புலியான
அலியிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு அன்கு அவர்களை யாம் துதிப்பாம்.
வேறு
13.
நலிவற
வுலகநீதி நெறிமுறை பெருகநாளு
நமருயி ரரிய காவலா
யொலிகட
லுலகமீது தெரிதர வரியதீனு
முறுகதி ருதைய மாகவே
மலிபுக
ழரசர்சீய மிர்கமத நறைகுலாவு
மறைநபி மருக ராகிவா
ழலிதிரு
மதலையான வசனுசை னுபயபாத
மனுதின மனதி லோதுவாம்.
13
பதவுரை
நலிவு அற
உலகம் - துன்பமான தற்றுப் போகும்படி யுலகத்தின்கண், நீதிநெறி முறை பெருக - நியாயத்தினது
சன்மார்க்க ஒழுங்குகள் அதிகரிக்க, நாளும் நமர் உயிர் அரிய காவல் ஆய் - பிரதி தினமும்
நம்மவர்களி னாவிக்கு அருமையான காவலாகவும், ஒலிகடல் உலகம் மீது - சத்தியாநிற்கும்
சமுத்திரத்தை உடைய பூமியின் மீது, தெரிதர அரியதீன் - விளங்கும் வண்ணம் அரிதாகியதீனுல்
இஸ்லாமென்னும் மார்க்கத்தினது, உறு கதிரும் உதயம் ஆகவே - பொருந்திய கிரணங்களும்
தோற்றமாகவும், மலி புகழ் அரசர் சீயம் - மிகுந்த கீர்த்தியையுடைய அரசர்களாகிய
யானைகளுக்குச் சிங்கத்தை நிகர்த்த, மிர்க மதம் நறை குலாவும் - கத்தூரி வாசனையானது
குலவுகின்ற, மறைநபி மருகர் ஆகி வாழ் - புறுக்கானுல் அலீமென்னும் வேகத்தினது நபி நாயகம்
முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களின் மருகராய் வாழ்ந்த, அலி திருமதலை
|