பக்கம் எண் :

சீறாப்புராணம்

1120


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்விதம் வந்தெதிர்க்க, சந்திரனை இப்பூமியின் கண் வரவழைத்தவர்களான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அனுப்பிய அரசர்களான அந்த முகாஜிரீன்களும் வஞ்சனையை யுடைய அபூஜகிலென்பவன் இவ்வுலகத்தின் கண் தந்த புத்திரனாகிய இக்கிரிமா என்பவனின் சேனையும் ஐங்கதிகளையுங் கொண்ட குதிரைகளுடனும் யுத்தாயுதங்களைத் தாங்கிய கைகளுடனும் எதிராய் வெற்றி யானது எமக்கு உமக்கென்று இருக்கின்ற சமயத்தில்.

 

3035. சதிவைத்த கருதலர்த் தளத்தி னூடிருந்

     திதமித்த நபிகலி மாவுக் கின்புறு

     மதிவத்தி யெனுமிகு தாதும் வாம்பரி

     யுதபத்தும் வந்துபை தாவைக் கூடினார்.

42

      (இ-ள்) வஞ்சகத்தை வைத்த சத்துராதிக ளாகிய அந்தக் காபிர்களின் சேனையினுள் ளிருந்து நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் ழுலாயிலாஹ இல்லல்லாகு  முஹம்மதுர் றசூலுல்லாஹிழு யென்னுங் கலிமாவுக்கு ஒன்றித்த மகிழ்ச்சி பொருந்திய அறிவுச் சுடரென்று கூறா நிற்கும் மிகுதா தென்பவருந் தாவிச் சாடுகின்ற குதிரையை யுடைய உதபத் தென்பவரும் வந்து உபைதா றலி யல்லாகு அன்கு அவர்களைச் சேர்ந்தார்கள்.

 

3036. மாதவ ரிருவரும் வந்த போழ்தினி

     லாதரம் விடுத்தம ரரிக டுன்புறப்

     பூதலம் புகழுமொக் காசு புத்திரர்

     காதகல் சகுதொரு கணைதொட் டாரரோ.

43

      (இ-ள்) மகா தவத்தை யுடையவர்களான அந்த இரு பேர்களும் அவ்வாறு வந்து சேர்ந்த சமயத்தில், அன்பை விட்டுறைந்த அந்தச் சத்துராதிகளாகிய காபிர்கள் துன்பத்தைப் பொருந்தும் வண்ணம் இவ்வுலகமானது துதிக்கா நிற்கும் உக்கா சென்பவரின் புதல்வரான கொலைத் தொழி லகன்ற சகுது றலி யல்லாகு அன்கு அவர்கள் ஓரம்பை எய்தார்கள்.

 

3037. அடுத்துநின் றவரிசு லாமி லாயது

     மெடுத்தொரம் பெய்தவ ரிருந்த வேகமுங்

     கடுத்தலை யெடுத்தவர் கருத்துங் கண்டமர்

     தடுத்தபூ சகல்மகன் றளம்பின் வாங்கினான்.

44

      (இ-ள்) அவ்வா றெய்ய, அபூஜகி லென்பவனின் புதல்வனாகிய இக்கிரிமா வென்பவன் தனக்குச் சமீபித்து நின்றவரான மிகுதா தென்பவரும் உதபத் தென்பவரும் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தி லானதும் ஓரம்பை யெடுத்