பக்கம் எண் :

சீறாப்புராணம்

1192


இரண்டாம் பாகம்
 

பெண் தன்மையைக் கொண்ட அரசாகிய பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களையும், மிகவுந் துதித்து மனதின்கண் மகிழ்ச்சியானது அதிகரிக்கப் பெற்று நின்றார்கள்.

 

3233. முகம்மது நயினார் வாழ்த்தி மற்றமன் னவர்கள் வாழ்த்தப்

     புகலருங் கற்பின் மிக்க பூவைய ரெவரும் வாழ்த்த

     நகுமணிக் கொம்ப னாரு நரபுலி யலியு மின்ப

     மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகி னாரால்.

193

      (இ-ள்) அன்றியும், பிரகாசியா நிற்கும் இரத்தினத்தினாற் செய்யப்பட்ட கொம்பை நிகர்த்தவர்க ளான பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களும், மானுஷியர்களிற் புலி யாகிய அலி யிபுனு அபீத்தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களும், நமது நயினாரான நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் ஆசீர்வதிக்கவும், மற்ற அரசர்கள் துதிக்கவும், சொல்லுதற் கருமையான கற்பினால் மேன்பட்ட மாதர்களனைவரும் ஏத்தவும், இனிமையைக் கொண்ட இவ்வுலகமானது புகழ்ந்து போற்றவும், மணவறையிற் போய்த் தங்கினார்கள்.

 

கலி விருத்தம்

 

3234. இருவரு மணவறை புக்கி யின்புறப்

     பெருகிய மகிதலத் துறைந்த பேரிருள்

     வெருவுறத் திசைதிசை யொளிப்ப வெவ்விய

     பருதிவா னவன்கதிர் பரப்பத் தோன்றினான்.

194

      (இ-ள்) பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு ஆகிய இருவர்களும் அவ்வாறு மணவறையின் கண் புகுந்து இன்பத்தைப் பொருந்த, ஓங்கிய இந்தப் பூமியின் கண் தங்கிய பெரிய அந்தகாரமானது பயமடையவும், திக்குகளெல்லாவற்றிலுஞ் சென்று ஒளிக்கவும், கொடிய வட்ட வடிவையுடைய சூரியனானவன் தனது கிரணங்களைப் பரப்பும் வண்ண முதயமாயினான்.

 

3235. அடிதிரை வளைமணி யெறியு மாவிவாய்க்

     ணூடிமரை விரிதர விடிந்த காலையிற்

     படியினும் பெரும்பொறை பாத்தி மாதிரு

     வடிவுறும் புதுமணக் கோல வாயிலின்.

195

      (இ-ள்) அடிக்கின்ற அலைக ளானவை சங்கின் முத்தங்களை எடுத்து வீசா நிற்கும் தடாகங்களி னிடத்து வாசனையைக் கொண்ட தாமரைப் புஷ்பங்கள் மலரும் வண்ணம் சூரியனானவன் அவ்வாறு