பக்கம் எண் :

சீறாப்புராணம்

1195


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) இத் தன்மைத் தான பேர்களும் அங்கு வந்து சேர, நல்ல புஷ்பங்களைச் சூடப் பெற்ற பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹாவென்று சொல்லும் பூவைப் பொருந்திய கொடி யானவர்கள் ஒப்பற எதிரா யெழும்பி ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்று கூறினார்கள். அதற்கு அங்கு வந்த யாவர்களும் ழுவலைக்கு முஸ்ஸலாம்ழு என்று பிரதி வார்த்தையைச் சொல்லி அன்புற்றார்கள்.

 

3243. மணியொளி முகம்மது மகவை நோக்கிநன்

     கிணைமணிப் பணியொடும் புதிய தின்றியே

     பணிமொழி யீரொரு பழங்குப் பாயத்தை

     யணிவதென் னெமக்கெடுத் தருளு வீரென்றார்.

203

      (இ-ள்) அவ்வாறு அன்புற, முத்தி னொளி வாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களின் புதல்வியா ரான அந்தக் காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களைப் பார்த்துக் கட்டளையைப் பொருந்திய வார்த்தையையுடைய பாத்திமாவே! நீவிர் அழகானது இணையப் பெற்ற இரத்தினங்களை யுடைய ஆபரணங்களோடும் புதிய ஆடையான தில்லாமல் ஒரு பழய குப்பாயத்தை அணிந்த காரணம் யாது? அதை எமக்கு எடுத்துச் சொல்லு மென்று கேட்டார்கள்.

 

3244. தந்தையீர் துகிலிலாச் சஞ்ச லத்தினால்

     வந்தன னொருபக்கீர் வழங்கி னேனென

     விந்தெனு நுதலிய ரியம்பச் செவ்விய

     மந்தரப் புயநபி மறுத்துக் கூறுவார்.

204

      (இ-ள்) அவ்வாறு கேட்க, மூன்றாஞ் சந்திர னென்று கூறா நிற்கும் நெற்றியை யுடையவர்களான அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் எனது பிதா வாகிய நபிகட் பெருமானே! ஒரு பக்கீறானவன் வத்திர மில்லாத மனக் கவலையினால் இங்கு வந்தான். அவனுக்குக் கொடுத்து விட்டே னென்று கூற, அழகிய மலையை நிகர்த்த தோள்களை யுடைய அந்த நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் மறுத்துச் சொல்லுவார்கள்.

 

3245. இரவல ரிடத்தினிற் பழைய தீந்துநற்

     புரியிழை மென்றுகிற் புதுக்குப் பாயத்தை

     மருமணக் கோலத்தின் வனைய வேண்டுமென்

     றுரைதர மறுமொழி யுரைப்ப தாயினார்.

205