இரண்டாம் பாகம்
(இ-ள்) யாசிப்பிவர்க
ளிடத்தில் பழைய வத்திரங்களைக் கொடுத்து நல்ல முறுக்கைக் கொண்ட நூலினாற் செய்யப்பட்ட மெல்லிய
வத்திரத்தை யுடைய புதிய குப்பாயத்தைப் பரிமளத்தைப் பொருந்திய மணக் கோலத்தில் தரிக்க வேண்டுமென்று
சொல்ல அதற்கு அவர்கள் மறுமொழி சொல்லத் தொடங்கினார்கள்.
3246.
அழகிய தெவையுமல் லாவுக் காகவே
விழைவுடன் கொடுத்திட வேண்டு
மென்றுநும்
பழமறை வாக்கினாற் பகர்ந்த
தாலரோ
மழைதவழ் கொடையனீர் வழங்கி
னேனென்றார்.
206
(இ-ள்) மேகங்கள் தவழா
நிற்குங் குடையை யுடைய நபிகட் பெருமானே! அழகிய தான யாவற்றையும் ஆசையோடும் அல்லாகு சுபுகானகு
வத்த ஆலாவுக்காக கொடுக்க வேண்டு மென்று உங்களது பழமையான புறுக்கானுல் அலீமென்னும் வேத வசனத்தினாற்
கூறப்பட்டதால் யான் கொடுத்தே னென்று சொன்னார்கள்.
3247.
பாத்திமா வெனுமயில் பகரக்
கேட்டலர்த்
தேத்தரு புயநபி மகிழ்ந்த செய்கையால்
கோத்திரத் தவர்செழு முகங்கள்
கோதறப்
பூத்தசெந் தாமரைக் காடு
போன்றவே.
207
(இ-ள்) காத்தூனே ஜன்னத்
பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா வென்னும் அம் மயிலானவர்கள் அவ்வாறு கூறக் கேள்வியுற்றுப்
புஷ்பங்களினது மதுவைத் தரா நிற்குந் தோள்களையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் மகிழ்ச்சியடைந்த செய்கையினால் அவர்களின்
குடும்பத்திலுள்ளவர்களினது செழிய வதனங்களானவை, களங்கமற மலர்ந்த செந்நிறத்தை யுடைய தாமரையினது
ஆரண்ணியத்தை யொத்தன.
3248.
ஆண்டகை யலிமனைக் கம்ம நின்னையான்
கூண்டவ ருடனுமே கூட்டிச் செல்வதற்
கீண்டுவந் துறைந்தன னென்ன
யாவருங்
காண்டருங் காரண கழறி னாரரோ.
208
(இ-ள்) அவ்வாறு ஒப்ப,
யாவருங் காணுதற் கருமையான காரணங்களை யுடையவர்களாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அம்மா! உங்களை யான் என்னுடன் கூடி வந்தவர்ளோடு
அரசரான அலி யிபுனு அபீத்தாலிபு றலியல்லாகு
|