பக்கம் எண் :

சீறாப்புராணம்

1203


இரண்டாம் பாகம்
 

அவ்வாறு கற்பித்த அக் கற்பனையை அவ் ஹம்சா றலி யல்லாகு அன்கு அவர்களுந் தங்களின் சிரத்தின் மீது கொண்டு ஆகாயத்தினிடத்து உலாவி வரா நிற்கும் விசையினது பெரிய வல்லமையை யுடைய குதிரையின் மேலேறினார்கள்.

 

3267. பரகதிப் படையொடும் படைக்கு ழாத்தொடும்

     வரமுறு முகம்மதை வாழ்த்தி வாண்மறாக்

    கரதல ரெனுமமு சாபெய் கார்முகிற்

    பொருதிரைக் கடற்கரை யிடத்திற் போயினார்.

7

      (இ-ள்) அவ்வாறு ஏறிய வாளாயுதத்தை மறக்காத கைத்தலத்தை யுடையா ரென்று சொல்லா நிற்கும் அவ் ஹம்சா றலி யல்லாகு அன்கு அவர்கள் வரத்தைப் பொருந்திய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைப் புகழ்ந்து கல்லணையைக் கொண்ட ஐங்கதிகளையு முடைய குதிரைப் படையோடுங் காலாட் படையோடும் மழையைப் பொழிகின்ற கரிய நிறத்தை யுடைய மேகத்தை யொத்த அலைகளைக் கொண்ட சமுத்திர தீர மாகிய அந்தச் சீபுல் பகுறு வென்னுந் தானத்தின் கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

3268. உவமையின் மிடலமு சாவந் துற்றவை

     யபுசக லறிந்தடற் பரியுஞ் சேனையுங்

     குவிதரப் பொருமமர்க் கோலந் தன்னொடும்

     புவிதுக ளெழவெதிர் புறப்பட் டானரோ.

8

      (இ-ள்) ஒப் பில்லாத வல்லமையை யுடைய அவ் ஹம்சா றலி யல்லாகு அன்கு அவர்கள் அவ்வாறு வந்து சேர்ந்த சமாச்சாரங்களை அபூஜகி லென்பவன் தெரிந்த வலிமையையுடைய குதிரைப் படைகளுங் காலாட் படைகளுந் தன்னை நெருங்கும் வண்ணம் பொருதுகின்ற யுத்தக் கோலத்தோடும் பூமியினிடத்துத் தூளானது எழும்பும்படி அவர்களுக் கெதிராய்ப் புறப்பட்டு வந்தான்.

 

3269. தவிசுறை முகம்மதின் சிறிய தந்தையும்

     பவுரிகொள் கவனவெம் பரியும் வீரருந்

     துவசமுந் துலங்கிடச் சூழி மாகரி

     யபுசகல் வருமிடத் தெதிர்வ தாயினார்.

9

      (இ-ள்) அவன் அவ்வாறு வர, சிங்காசனத்தின் மீது தங்கிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் சிறிய பிதாவாகிய அந்த ஹம்சா றலி யல்லாகு அன்கு அவர்களும் கூத்தின் விகற்பத்தைக்