இரண்டாம் பாகம்
கொண்ட வேகத்தை யுடைய வெவ்விய
குதிரைப் படையும் கொடிப் படையும் பிரகாசிக்கும் படி முகபடாத்தை யுடைய பெரிய யானையை நிகர்த்த
அவ் வபூஜகி லென்பவன் வருகின்ற தானத்தின் கண் எதிர்த்துச் சென்றார்கள்.
3270.
இருவர்தஞ் சேனையு மெதிருங்
காலையிற்
றிருகுநெஞ் சபூசகல் சேனை
புக்கிருந்
தரிதினிற் றனித்தமு சாவென்
றோதிய
மருமலர்ப் புயத்தின ரிடத்தில்
வந்தனன்.
10
(இ-ள்) அவ்வாறு
இருவரின் படைகளும் ஒன்றோ டொன்று எதிர்க்கின்ற சமயத்தில், ஒருவன் முரணிய மனத்தை யுடைய
அபூஜகி லென்பவனது படையிற் புகுந்திருந்து அரிதில் ஏகமாய் ஹம்சா றலி யல்லாகு அன்குவென்று கூறிய
வாசனையைக் கொண்ட புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையைத் தரித்த தோள்களை யுடையவரிடத்தில்
வந்து சேர்ந்தான்.
3271.
மறைநபி முகம்மதி னிடத்தும்
வன்குபிர்
செறுநர்க ளிடத்தினுஞ் சேர்ந்த
பண்பினன்
கறைகொள்வஞ் சங்கப டடைந்த
கல்பின
னிறுமொழிச் சூதினன்
மசுதிய் யென்பவன்.
11
(இ-ள்) அவ்வாறு வந்து சேர்ந்த
புறுக்கானுல் மஜீ தென்னும் வேதத்தையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களிடத்திலும் கொடிய குபிர் மார்க்கத்தை யுடைய சத்துராதிக ளிடத்திலும்
பொருந்திய குணத்தை யுடையவனும் குற்றத்தைக் கொண்ட வஞ்சகமும் கபடமும் கூடிய மனதை யுடையவனும்
கெடு மொழியினது சூதை யுடையவனுமான அந்த மசுதிய் யென்னும் பெயரை யுடையவன்.
3272.
தருத்தனை யுறழ்நபி சிறிய
தந்தையர்
கருத்தினுக் கேற்பவைக்
கபடந் தோன்றிலா
திருத்திநன் மொழியொடு
மிசைவ தாகவே
பொருத்தினன் றவிர்த்தனன்
போரின் கோலமே.
12
(இ-ள்) கற்பக விருட்சத்தை
நிகர்த்த நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் சிறிய
பிதாவாகிய அவ் ஹம்சா றலி யல்லாகு அன்கு அவர்களினது அபிப்பிராயத்திற்குப் பொருந்திய சில
சமாச்சாரங்களைத் தனது வஞ்சகமானது வெளிப்படாமல் சொல்லி அவர்களின் மனதிலிருக்கச் செய்து
நல்ல வார்த்தைக ளோடும் தாங்கள் இணங்கிப் போவதாக அவர்களைப் பொருந்தப் படுத்தி அப்போது
கொண்ட யுத்த கோலத்தையுந் தவிர்த்தான்.
|