பக்கம் எண் :

சீறாப்புராணம்

1208


New Page 3

இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அப் பெயரைக் கொண்ட தொடர்பற்ற நட்பையுடைய மசுதிய்யென்று சொல்லும் அந்தக் கொடுமையை யுடையவன் தங்கிய அந்தப் புவாத் தூரினது கோட்டையைத் தங்களின் குதிரைப் படையும் காலாட் படையும் நான்கு புறத்திலும் வளையும் வண்ணம் அழகு பொருந்திய நபிகட் பெருமானார் நபி ஹபீபு றப்பில் ஆலமீன் றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அங்குத் தங்கியிருந்தார்கள்.

 

3283. உய்யுநன் மதியில னுறைந்த வூரினை

     வையகம் புகழ்நபி வளைந்த காலையில்

     வெய்யவன் பூதலம் விளக்கி நீள்கதிர்க்

     கையினை யொடுக்கிமேற் கடற்புக் கானரோ.

8

      (இ-ள்) ஈடேறும் நல்லறி வில்லாதவனான அந்த மசுதிய் யென்பவன் தங்கிய அப்புவாத் தென்னும் நகரத்தை இவ்வுலகமானது துதிக்கா நிற்கும் நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு வளைந்த சமயத்தில், சூரிய னானவன் இப் பூமியினிடங்க ளெல்லா வற்றையும் விளங்கச் செய்து நீண்ட கிரணங்க ளாகிய தனது கரங்களை ஒடுக்கிக் கொண்டு மேல் பாற் சமுத்திரத்திற் போய்ச் சேர்ந்தான்.

 

3284. இரவினிற் படைவளைந் திருப்பக் கீழ்த்திசை
     விரிதர வெளுத்தது விரைவி னன்னபி

     யரியவற் றொழபஜி றடுத்த தீம்புனற்

     றருகவென் றுரைத்தனர் சாபிர் தன்னையே.

9

     (இ-ள்) அவ் விராப் பொழுதில் அச்சேனை அவ் வூரைச் சூழ்ந்திருக்கக் கீழ்த் திசையானது பிரகாசிக்கும்படி வெளுப்புற்றது. உடனே நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் சாபிர் றலி யல்லாகு அன்கு அவர்களை அரியவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவை வணங்குவதற்கா யுள்ள பஜிர் நேரமானது வந்து நெருங்கிற்று. ஆதலால் எனக்கு உலுச் செய்வதற்கு நீவிர் வேகத்தில் இனிய நீர் கொண்டு வந்து கொடுமென்று கேட்டார்கள்.

 

3285. ஏடலம் பியபுய நபியி சைத்தலு

     மூடிய கடங்களுந் துருத்தி மூட்டையுந்

     தேடின ரில்லெனத் திசையும் பாடியு

     மோடினர் நீருறை யொருங்கு காண்கிலார்.

10

      (இ-ள்) இதழ்களைக் கொண்ட புஷ்பங்களினாற் செய்யப்பட்ட மாலைகளானவை  அசையப் பெற்ற தோள்களை