இரண்டாம் பாகம்
(இ-ள்) அம் மரமானது அவ்வாறு
வந்து நின்று இப் பூலோகத்தினிடத்துள்ள மாந்தர்களும் தேவ லோகத்தின் கண்ணுள்ள தேவர்களுங்
காதுகளினாற் கேட்கும்படி அழகானது பொருந்தும் வண்ணம் ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்று கூறி யானிருந்தப்
பூமியின் கண் ணீடேறினே னென்று ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூல்லாஹிழு யென்னுங் கலிமாவையுஞ்
சொல்லிற்று.
3329.
இருவகை மொழியுங்கேட் டறபி
யீங்குறை
தருவினை முன்னுறை தானஞ் சேர்தர
வருளுகென் றுரைத்தன னாதி
தூதரு
மொருமொழி செல்கென வுவந்து
கூறினார்.
34
(இ-ள்) அவ்வாறு
சொல்லிய இரண்டு வகையான வார்த்தைகளையும் அந்த அறபியானவன் கேள்வி யுற்று இங்குத் தங்கிய
இம் மரத்தை அஃது ஆதியில் நின்ற இடத்திற் போய்ச் சேரும்படி கிருபை செய்யுங்க ளென்று வேண்ட,
யாவற்றிற்கு முதன்மைய னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலாகிய ஹாமிது அஹ்மது முகம்மது முஸ்தபா
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் அம் மரத்தை நீ நின்ற தானத்திற் போய் நிற்பாயாக வென்று
ஒப்பற்ற ஓர் வார்த்தையை விருப்பத் தோடுஞ் சொன்னார்கள்.
3330.
வடவரைப் புயநபி வசனங் கேட்டலு
முடைமர மிலையிலொன் றுதிர்த
ராமலே
படர்பணர் துயல்வர சலாம்
பகர்ந்தக
மடைவபோ லேகிமுன் னிடத்தி
னாயதால்.
35
(இ-ள்) மகா மேரு
பருவத்தை நிகர்த்த தோள்களை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு சொல்லிய அந்த வார்த்தையை அந்த உடை மரமானது கேள்வியுற்ற
மாத்திரத்தில், தனது இலைகளில் ஓ ரிலையு முதிராமல் விரிந்த கிளைக ளானவை அசையும் வண்ணம்
ழுஅஸ்ஸலாமு அலைக்குழு மென்று சலாஞ் சொல்லித் தன்னகத்திற் போய்ச் சேருவதைப் போலும் சென்று
ஆதியில் நின்ற அவ்விடத்தி லாயிற்று.
3331.
தருப்புது மைகடரத் தந்த நந்நபி
திருப்பதத் தினிற்சிரஞ் சேர்க்கத்
தன்மன
மொருப்படச் செழுங்கலி
மாவை யோதிநல்
விருப்போடு நெறியிசு
லாயின் மேவினான்.
36
|