பக்கம் எண் :

சீறாப்புராணம்

1224


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அந்த வுடை மரமானது அவ்வாறு அற்புதங்களைத் தரும்படி யருளிய நமது நாயகம் ஹாமிது அஹ்மது முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் தெய்வீகந் தங்கிய பாதங்களில் அந்த அறபி யானவன் தனது தலையைப் பொருத்தி வணங்கும் வண்ணம் அவனது இதயமானது ஒன்றிக்க, உடனே ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூலுல்லாஹிழு யென்னும் செழிய கலிமாவைச் சொல்லி நல்ல ஆசையோடு ஒழுங்கைக் கொண்ட தீனுல் இஸ்லா மென்னு மெய்ம் மார்க்கத்திற் சேர்ந்தான்.

 

3332. காரணக் குரிசில்நுங் கமல மாமல

     ரீரடி யினுஞ்சச தாச்செய் தேத்தியிப்

     பாரிடைப் பலன்பெறப் பரிவி னோர்விடை

     தாருமென் றுரைத்தனன் றழைத்த புந்தியான்.

37

      (இ-ள்) அன்றியும், ஓங்கிய அறிவை யுடையவனான அந்த அறபி யானவன் காரணத்தைக் கொண்ட பெருமையிற் சிறந்த நபிகட் பெருமானே! உங்களது பெருமை பொருந்திய தாமரை மலரை நிகர்த்த இரு திருவடிகளிலும் எனது தலையானது படும் வண்ணம் சஜதாச் செய்து வணங்கி யான் இப் பூமியின் கண் பலனை யடையும்படி ஒப்பற்ற உத்தரவைத் தாங்கள் அன்போடு மருளுங்க ளென்று கேட்டான்.

 

3333. அறபியிவ் வுரைதர வழகின் பேறுறத்

     தறைசிரம் படசச தாச்செய் தேத்துவ

     திறைவனுக் கல்லது மாந்தர்க் கில்லென

     முறைமையின் மறைவழி மொழிந்து காட்டினார்.

38

      (இ-ள்) அவ் வறபி யானவன் இவ் வார்த்தைகளைச் சொல்ல, அழகினது பேறானது பொருந்தும் வண்ணந் தலை யானது பூமியிற் படும்படி சஜதாச் செய்து வணங்குவது கடவுளான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவுக்கே யல்லாமல் மானுஷியர்களுக் கல்ல வென்று ஒழுங்கோடும் புறுக்கானுல் கரீ மென்னும் வேதத்தினது முறைமைகளைச் சொல்லிக் காட்டினார்கள்.

 

3334. துன்னிதழ்த் தாமரைப் பாதந் தொட்டியா

     னென்னிரு விழிசிர மேத்த வாயினு

     முன்னுளத் திசைந்தரு ளுரைசெய் வீரெனப்

     பொன்னகங் காவலர் பொருந்தி னாரரோ.

39

      (இ-ள்) அவ்வாறு காட்ட, அவன் நெருங்கிய இதழ்களையுடைய தாமரை மலரை நிகர்த்த உங்கள் திருவடிகளை யான் எனது கையால் தீண்டி இரு கண்களிலும் தலையிலும் வைத்து வணங்க