பக்கம் எண் :

சீறாப்புராணம்

1228


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு ஏறிய ஒளிவானது பிரகாசியா நிற்கும் வேலாயுதத்தைத் தாங்கிய சிவந்த கையை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அனுப்பிய அரசர்களான அவர்கள் ஆதிசேடனும் தன்னுடலை நெளியும் வண்ணந் தாவிச் சாடுகின்ற குதிரைகளோடும் பொன்னையும் நல்ல இரத்தினங்களையும் வஸ்திரங்களையும் குதிரைகளிலும் ஒட்டகங்களிலு மேற்றிப் பெருமை தங்கிய பிரகாசத்தை யுடைய வாளாயுதத்தைக் கைகளில் தாங்கிக் கொண்டு வாலிபர்க ளான அந்தக் காபிர்களும் வருவதைப் பார்த்து எதிர்த்துக் கொண்டார்கள்.

 

3343. செயலறு மருவ லாருந் தீனவர் படையுந் தாக்கிக்

     கயினுறை கழித்த வாளின் கண்கடீக் கனலக் காதி

     வெயிலவன் கதிரிற் றூண்டும் வெஞ்சரந் தொடுத்து நீண்ட

     வயிலொடு மயில்க ணீட்டி யடுஞ்சமர் விளைத்து நின்றார்.

7

      (இ-ள்) ஒழுக்க மற்ற சத்துராதிகளான அந்தக் காபிர்களின் சேனையும் தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினர் சேனையும் அவ்வாறு எதிர்த்து முட்டுண்டு உறையை நீக்கிய கையிலிருந்த வாளாயுதத்தினால் இரு விழிகளிலும் அக்கினி யானது எரியும் வண்ணம் வெட்டிக் கூறு செய்து சூரியனது கிரணத்தைப் போலுஞ் செலுத்துகின்ற வெவ்விய அம்புகளைத் தொடுத்து நீட்சி பொருந்திய வேலுடன் வேற்களை நீட்டிக் கொல்லுதற் றொழிலைச் செய்யுகின்ற யுத்தத்தைப் புரிந்தார்கள்.

 

3344. அமரிடை வெகுண்டு சீறிக் காபிரி லம்றென் றோதுங்

     குமரன்முன் னெதிர்ந்து தாவக் கோளரி யப்துல் லாகண்

     டிமைசுட விழித்து முன்ன ரேகித்தம் வாளால் வாசிச்

     சுமைகெட விரண்டு துண்டம் படவுட றுணித்து நின்றார்.

8

      (இ-ள்) அவ்வாறு நிற்க, அந்த யுத்தக் களத்தி னிடத்துக் காபிர்களில் அம்று என்று சொல்லும் வாலிப வயதை யுடைய ஒருவன் கோபித்து அதட்டி முன்னால் எதிர்த்துச் சாட, அதைக் கொலைத் தொழிலைச் செய்கின்ற சிங்கத்தை நிகர்த்த அப்துல்லா றலி யல்லாகு அன்கு அவர்கள் பார்த்துத் தங்களின் இரண்டு இமைகளுஞ் சுடும் வண்ணங் கண்களை விழித்து அவனது முன்னாற் சென்று வாளினால் அவன் குதிரையினது சுமை யானது கெட்டுப் போகும்படி அவனது சரீரத்தை இரு துண்டாக வெட்டினார்கள்.