பக்கம் எண் :

சீறாப்புராணம்

1230


இரண்டாம் பாகம்
 

அரசரான அவ்வப்துல்லா றலி யல்லாகு அன்கு அவர்கள் அவ்விடத்தை விட்டும் புறப்பட்டார்கள்.

 

3348. எண்ணொணாத் திரகங் கைக்கொண் டெண்மரு மிலங்கும் வேற்கை

     யண்ணலென் றிசைக்குங் கீர்த்தி யப்துல்லா வென்னும் வேந்தும்

     விண்ணினுந் திசையுந் தீன்தீ னெனுமொழி விளங்கக் கூறிப்

     பண்ணெலாம் விளையாட் டெய்தும் பதியெனு மதீனஞ் சேர்ந்தார்.

12

      (இ-ள்) கணக்கிடற் கரிதான திரக மாகிய அப் பொற் காசுகளைக் கைக் கொண்டு அவ்வாறு புறப்பட்டு முஹாஜிரீன்களான அவ்வெட்டுப் பேரும் பிரகாசியா நிற்கும் வேலாயுதத்தைத் தாங்கிய கையையுடைய அண்ணலா ரென்று கூறுங் கீர்த்தியைக் கொண்ட அப்துல்லா றலி யல்லாகு அன்கு என்னு மரசரும் தீன்! தீன்!! என்று சொல்லும் வார்த்தையானது ஆகாயத்தின் கண்ணும் எண்டிசையின் கண்ணும் விளங்கும் வண்ண மோதி நீர் நீலைகளாகிய தடாகங்களியாவும் மாதர்களின் விளையாட்டைப் பொருந்திய பட்டின மென்று சொல்லுந் திரு மதீனமா நகரத்திற் போய்ச் சேர்ந்தார்கள்.

 

3349. அறைகட லவனி காக்கு மகுமதி னிடத்தை நண்ணி

     முறைமுறை பணிந்து போந்து நிகழ்ந்தவை மொழிந்து சேர்த்த

     சிறையுடன் பொதியிற் செய்த திரகத்தின் றொகுதி காட்டித்

     தறுகிலா தெழுந்து போற்றி யவரவர் சார்பிற் சார்ந்தார்.

13

      (இ-ள்) அவ்வாறு போய்ச் சேர்ந்து ஒலிக்கா நிற்குஞ் சமுத்திரத்தைக் கொண்ட இப் பூமியைக் காக்குகின்ற அஹ்மதென்னுந் திருநாமத்தை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் சந்நிதானத்தை யடைந்து பன்முறை வணங்கித் தாங்கள் பின் அங்கு நடந்த சமாச்சாரங்களைக் கூறிச் சிறையோடு மூட்டையாகச் செய்து கொண்டு வந்த பொற் காசினது கூட்டத்தையுங் காட்டித் தவறாம லெழும்பித் துதித்துத் தத்த மிருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.

 

3350. பூசலிட் டடைய லாரைப் பொருதுவெல் லுவதற் காகா

     மாசபே தத்திற் பொன்னை வைத்தனர் சின்னாட் பின்ன

     ராசிலான் கருணை கூர வாயத்தொன் றிறங்கை யாலே

     பாசமுற் றவர்கட் கெல்லாம் பகுந்தினி தளித்திட் டாரால்.

14

      (இ-ள்) அவர்கள் அவ்விதம் போய்ச் சேர, சத்துராதிக ளான காபிர்களைப் பொருந்திச் சண்டை செய்து ஜெயிப்பதற் காகாத