இரண்டாம் பாகம்
3586.
வசைமொழி யுரைப்பக் கடிதினில்
வெகுண்டு
மருங்குடை வாளினை
வாங்கி
விசையுடன் றாடி தனைப்பிடித்
தீழ்த்து
விறற்கொழுங் கரத்தினிற்
சுற்றி
யசைவுறுஞ் சிரசை யறுத்துவே
றாக்கி
யவனுடனெ ழுவர்க டமையும்
பசையறும் பாழ்ங்கூ வலினிடைப்
படுத்தி
விட்டனர் பலன்படை
யாமல்.
235
(இ-ள்) அவன் அவ்வாறு
இகழ்ச்சியான வார்த்தைகளைக் கூற, அவ்விபுனு மஸ்வூது றலியல்லாகு அன்கு அவர்கள் விரைவிற்
கோபித்துத் தங்களது இடையிலிருந்த உடைவாளைக் கையினால் வாங்கி வேகத்தோடும் அவன் தாடியைப்
பற்றி இழுத்து வலிமை பொருந்திய கையிற் சுற்றி ஆடுகின்ற அவனது தலையை அறுத்து வேறாகச் செய்து
அவனோடு ஒலீது, உத்துபா, உக்குபா, உமையா, உமாறா, சைபாவாகிய ஏழுபேர்களையும் யாதொரு பிரயோசனத்தையுஞ்
சம்பாதிக்காமல் ஈரமற்ற பாழாகிய நரகக்கிடங்கி னிடத்தகப் படுத்தினார்கள்.
3587.
அபூசகல் சிரத்தைக் கரத்தினிற்
றூக்கி
யள்ளலங் குருதியிற்
றிரிந்த
கவிசிறைப் பறவைக் குலங்களு
மிரியக்
கணத்தொடு நரிக்குல
மொதுங்கச்
சவிதருங் கொடியுங் கவரியுங்
குடையுந்
தாளினை யிடறிட நடந்து
புவியிடைப் பரந்த பறந்தலை
கடந்து
போயின ரிறங்குபா
சறையின்.
236
(இ-ள்) அவ்வாறு படுத்திய
அவர்கள் அபூஜகி லென்பவனது தலையைக் கையினால் தூக்கிக் கொண்டு அழகிய இரத்தித்தினது சேற்றில்
அலைந்த கவிந்த சிறகுகளையுடைய பட்சிக் கூட்டங்கள் ஓடவும், தங்கள் கூட்டத்தோடும் நரியினங்கள்
ஒதுங்கவும், பிரகாசத்தைத் தருகின்ற கொடிகளும், சாமரங்களும், குடைகளும், இரு பாதங்களிலுந் தட்டவும்,
நடந்து பூமியினிடத்து விரிந்த அந்த யுத்தக் களத்தைத் தாண்டித் தாங்க ளிறங்கியிருந்த பாசறையின்கண்
போய்ச் சேர்ந்தார்கள்.
3588.
மறத்தினைத் தொடுத்துத்
தீவினை விளைத்து
வஞ்சகம் பலபல வியற்றி
யறத்தினை வெறுத்த
கொடும்பெரும் பதக
னபூசக றலையிஃ தென்ன
|