இரண்டாம் பாகம்
நிறுத்திய தீனி லுலகெலாம்
புரந்த
நீணபி முகம்மது வென்னுந்
திறத்தவர் திருமுன் வைத்தனர்
கதிர்வே
லேந்திய செழுங்கர
தலத்தார்.
237
(இ-ள்) அவ்வாறு
போய்ச் சேர்ந்த பிரகாசத்தைக் கொண்ட வேலாயுதத்தைத் தாங்கிய செழுமையான கைத்தலத்தை யுடைய
அந்த இபுனு மஸ்வூது றலியல்லாகு அன்கு அவர்கள் கெடுதிகளைக் கோத்துப் பாவத்தை யுண்டாக்கிப் பற்பல
வஞ்சகங்களைச் செய்து புண்ணியத்தை மறுத்த கொடுமையையுடைய பெரிய சண்டாளனாகிய அபூஜகிலென்பவனது
தலையானது இஃது, என்று சொல்லி நிலையாக நாட்டிய தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினால்
உலக முழுவதையும் ஆட்சி செய்த ஒளிவைக் கொண்ட நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மென்னும் வலிமையை யுடையவர்களது தெய்வீகந் தங்கிய சந்நிதானத்தில்
வைத்தார்கள்.
3589.
ஆதியைப் புகழ்ந்து காபிர்தம்
வலியு
மற்றது தீனெனும் பயிரின்
கோதறுங் கொழுந்துங் குவலயம்
படர்ந்த
தின்றென யாவர்க்குங்
கூறித்
தீதுறுங் கொடிய பாதகன் சிரசை
யகற்றுமி னெனச்செழு
மறையின்
மூதுரை தெரிந்த புரவல ருடனு
மிருந்தனர் மூன்றுநா ளவணின்.
238
(இ-ள்) அவ்வாறு வைக்க,
அவர்கள் யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவைத் துதித்து இன்றையத் தினம்
காபிர்களாகிய சத்துராதிகளது வல்லமையும் அற்றது. தீனுல் இஸ்லா மென்றும் சொல்லும் பயிரினது
களங்கமற்ற கொழுந்தும் இப்பூமியினிடத்துப் பரவிற்று, என்று எல்லாருக்குஞ் சொல்லித் தீமையைப்
பொருந்திய கொடிய துரோகியான இவ்வபூஜகி லென்பவனது தலையை இவ்விடத்தை விட்டு மகலப்பண்ணுங்க
ளென்று செழிய புறுக்கானுல் கரீமென்னும் வேதத்தினது முதிய வசனங்களை யுணர்ந்த அரசர்களான சஹாபாக்களோடும்
அந்தப் பதுறென்னுந் தானத்தில் மூன்று நாள் வரையுந் தங்கி யிருந்தார்கள்.
|