இரண்டாம் பாகம்
வசல்ல மவர்களும் இதுவே நல்ல
காரியமென்று சொல்லி அந்த அபாசுபியா னென்பவனது பொருட்களின் மேல் செல்லுதலை விட்டார்கள்.
3596.
நுதிகொழுங் கதிர்வேற்
காபிரை பதுறி
லடர்ந்தமுந் நூற்றுடன்
பதினான்
கிதமுறுந் தலைவர்க் கும்பர்மா
ராய
முண்டென வியல்பொடு
முரைத்துக்
கதிகொளும் பரியுந் தானையு
நெருங்கக்
கானகம் பலபல கடந்து
சதுமறை முழக்க மார்த்தெழ
மலீக்கு
சபுறாவாந் தலத்தில்வந்
திறுத்தார்.
245
(இ-ள்) அவ்வாறு விட்டு
முனையைக் கொண்ட பிரகாசந் தங்கிய வேலாயுதத்தை யுடைய காபிர்களான சத்துராதிகளைப் பதுறென்னும்
தானத்திற் பொருதி ஜெயித்த இன்பத்தைப் பொருந்திய முந்நூற்றுப் பதினான்கு தலைவர்களுக்கும் தேவர்களாகிய
மலாயிக்கத்து மார்களினது சோபன முண்டென்று இயல்போடுங் கூறி வேகத்தைக் கொண்ட குதிரைப்
படைகளும் மற்ற சேனைகளுஞ் செறியும், நான்கு வேதங்களினது முழக்கமுங் ஒலித்து ஓங்கவும், பற்பல
காடுகளையுந் தாண்டி மலீக்குச் சபுறாவாகிய தானத்தில் வந்து தங்கினார்கள்.
3597.
குறைந்திட ரொடுங்கிப்
போயின மருவார்
பாசறைக்
கொள்ளையின் றொகையு
மிறந்திடு மெழுப தருந்திறல்
வேந்த
ரிடுகலன் களும்படைக்
கலனுஞ்
சிறந்தவெம் பரியுஞ் சகுபிக
ளெவர்க்குந்
தெரிதரப் பகுந்தெடுத்
தளித்தார்
புறந்தரு களத்தின் முத்திரை
படைத்துப்
புகழ்பெறு முகம்மது நபியே.
246
(இ-ள்) அவ்வாறு தங்கிக்
கழுத்தினது பின்புறமாகிய பிடரியில் ஒளிவைத் தருகின்ற இலாஞ்சனையைப் பெற்றுக் கீர்த்தியை
யுடைந்த நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் துன்பமானது
அடங்கப் பெற்றுக் குறைந்து சென்ற சத்துராதிகளாகிய காபிர்களது பாசறைகளிலுள்ள கொள்ளையினது
கூட்டமான பொருட்களையும், அங்கு மடிந்த அரிய வல்லமையையுடைய எழுபது அரசர்கள் தாங்கள் தரித்திருந்த
ஆபரணங்களையும் அவர்களது யுத்தாயுதங்களையும், மேலான வெவ்விய குதிரைகளையும் எடுத்து
அசுஹாபிமார்க ளனைவருக்கும் விளங்கும்படிப் பாகித்துக் கொடுத்தார்கள்.
|