பக்கம் எண் :

சீறாப்புராணம்

1319


இரண்டாம் பாகம்
 

3598. அறபினின் மலீக்குச் சபுறாவாந் தலம்விட்

          டறப்பெரும் படைபுறஞ் சூழ

     இறௌகா வெனுமத் தலத்தினில் வரும்போழ்

          தியல்பெறு மதீனமன் னவரும்

     புறநக ரவருந் திரண்டெதிர் பணிந்து

          பொங்கிய முழக்கொடுஞ் சூழ

     நறவுகொப் பிளிக்குந் துடவைசூழ் நகரி

          னண்ணினர் முகம்மது நபியே.

247

      (இ-ள்) நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு கொடுத்து அறபி ராச்சியத்திலுள்ள அந்த மலீக்குச் சபுறாவாகிய தானத்தை விடுத்து மிகவும் பெருமையையுடைய சேனைகள் பக்கத்தில் சூழும் வண்ணம் இறௌகாவென்று சொல்லுந் அந்தத் தானத்தில் வருகின்ற சமயத்தில், ஒழுங்கைப் பெற்ற திரு மதீனமா நகரத்தினது அரசர்களும், வெளியூரி லுள்ளவர்களும் ஒன்று கூடி வந்து அவர்களது முன்னர்த் தாழ்ந்து ஓங்கிய முழக்கத்தோடுஞ் சூழ, மதுவைக் கக்கா நிற்குஞ் சோலைகள் சூழ்ந்த தங்கள் ஊரின்கண் வந்து சேர்ந்தார்கள்.

 

3599. மறையவர் வாக்கின் பயித்தொலி முழங்க

          வானவ ரினிதுவாழ்த் தெடுப்பக்

     கறைகொளுங் கதிர்வேற் காளையர் சூழக்

          கவிகையுங் கவரியு மலிய

     முறைமுறை பேரி தவில்பறை திடிமன்

          முருடுசச் சரிமுர சதிர

     விறையவ னருளால் வெற்றிகொண் டிறசூ

          லிலங்கிய நகரின்வந் தனரால்.

248

      (இ-ள்) அன்றியும், றசூலாகிய நமது நாயகம் ஹாமிது அஹ்மது முகம்மது முஸ்தபா ஹபீபு றப்பில் ஆலமீன் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் வேதியர்களது வாயில் பயித்தின் ஓசையானது முழங்கவும், தேவர்களான மலாயிக்கத்துமார்கள் இனிமையோடும் துதிக்கவும், இரத்தக் கறையைக் கொண்ட பிரகாசத்தை யுடைய வேலாயுதத்தைத் தாங்கிய வீரர்கள் சூழவும், குடைகளும், சாமரங்களும் ஓங்கவும், வரிசை வரிசையாகப் பேரிகை, தவில், பறை, திடிமன், முருடு, சச்சரி, முரசு ஆகிய இவைகள் ஒலிக்கவும், கடவுளான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் காருண்ணியத்தினால் விஜயத்தைப் பெற்றுப் பிரகாசியா நிற்கும் தங்களது பட்டினமாகிய திரு மதீனமா நகரத்தின்கண் வந்து சேர்ந்தார்கள்.