பக்கம் எண் :

சீறாப்புராணம்

1320


இரண்டாம் பாகம்
 

3600. மடலவிழ் வனச வாவிசூழ் மதீனா

          வந்தபின் மற்றைநாள் பதுறிற்

     பிடிபடு மவரைக் கொணர்கெனக் கூறப்

          பெருஞ்சிறை சாலையி னண்ணிக்

     கடிதினி லெழுப தரசர்க டமையுங்

          கையினிற் றளையொடுங் கொடுவந்

     தடல்பெருங் குரிசின் முகம்மது நபிமுன்

          விடுத்தன ரணிவய வீரர்.

249

      (இ-ள்) இதழ்கள் விரிந்த தாமரை மலர்களையுடைய தடாகங்கள் சூழ்ந்த திரு மதீனமா நகரத்தின்கண் அவ்வாறு வந்து சேர்ந்த பிற்பாடு அடுத்த நாள் பதுறென்னுந் தானத்தில் நடந்த சண்டையிற் பிடிபட்டவர்களை இங்குக் கொண்டு வாருங்களென்று ஏவ, அழகிய வெற்றியையுடைய வீரர்கள் விரைவிற் பெரிய சிறைச்சாலையிற் போய்க் கையினிடத்துள்ள தளையுடன் அந்த எழுபது மன்னர்களையுங் கொண்டு வந்து வலிமை பொருந்திய பெரிய குரிசிலாகிய நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது சந்நிதானத்தில் விட்டார்கள்.

 

3601. ஆரிது புதல்வ னலிறையும் பதக

          னுக்குபத் தென்பவன் றனையு

     மூரினிற் புறத்திற் பாதையி னாப்பண்

          டலைகளைந் திடுகவென் றுரைப்ப

     வீரர்கள் வெகுண்டு பிடித்தகைக் கயிற்றின்

          விரைவொடு நடத்தியவ் வுழையிற்

     சோரிநீ ரொழுக விருவர்க டலையுந்

          துணித்தருங் கழுவினிட் டனரால்.

250

      (இ-ள்) அவ்வாறு விட, அவர்கள் ஆரிதென்பவனது புத்திரனான நலிறென்பவனையும், சண்டாளனாகிய உக்குபத்தென்பவனையும் ஊருக்கு வெளியிற் பாதையினது மத்தியில் வைத்து அவர்களது தலையை வெட்டி விடுங்களென்று கூற, வீரர்களான சஹாபாக்கள் கோபித்துத் தங்களது கையிற் பற்றிய கயிற்றினது வேகத்தோடும் அவர்களை நடத்தி அவர்கள் கூறிய இடத்திற் சென்று இரத்தநீர் சிந்தும்படி அந்த இரண்டு பேர்களது சிரத்தையுந் வெட்டி அரிய கழுவிலிட்டார்கள்.

 

3602. நற்றவ முடைய முகம்மதின் கலிமா

          நாவினி லியற்றிடா தெதிர்ந்த

     பற்றல ருழையி னிருவர்க டமையும்

          பாழ்ங்குழி யிடைப்படர் படுத்தி