பக்கம் எண் :

சீறாப்புராணம்

1321


இரண்டாம் பாகம்
 

      மற்றவ ரறுபத் தெண்மர்க டமையு

           மாசில் அஸ்காபிக ளென்னுங்

      கொற்றவ ரெவருங் களித்தினி துவப்பக்

           கொடுத்தனர் பகுந்துபங் கியற்றி.

251 

      (இ-ள்) நல்ல தவத்தையுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது ழுலாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹிழு என்னுங் கலிமாவை நாவில் நடத்தாது எதிர்த்த சத்துராதிகளாகிய காபிர்களினிடத்துள்ள அந்த நலிறு, உக்குபா என்னும் இருவர்களையும் அவ்வாறு பாழாகிய நரகக் குண்டத்தினிடத்து புகுதும்படி செய்து மற்றவர்களான அந்த அறுபத்தெட்டுத் தலைவர்களையும், பாகித்துப் பங்கு செய்து குற்றமற்ற அஸ்ஹாபிகளென்று சொல்லும் அரசர்களனைவருஞ் சந்தோஷித்து இனிமை யோடும் உவக்கும் வண்ணங் கொடுத்தார்கள்.

 

3603.  உறுதலை விலைநா லாயிரந் திருக

          மொவ்வொரு வருக்கினி தளித்து

     மறுவற மீண்டு மக்கமா நகரார்

          போயினர் மன்னரப் பாசு

     மறிவுறு மபித்தா லிபுமகன் றனக்கு

          மாரிது மகனவு பலுக்கு

     முறைமையின் றமக்குந் தலைவிலை யாக

          மீண்டனர் முதுபொரு ளளித்தே.

252

      (இ-ள்) அவ்வாறு கொடுக்க, திரு மக்கமா நகரத்தையுடைய அந்தக் காபிர்கள் இனிமையோடும் பொருந்திய முதல்விலையாக ஒவ்வொருவருக்கு நாலாயிரந் திருகம் கொடுத்துக் களங்கமறத் திரும்பிப் போனார்கள். அரசராகிய அப்பாசென்பவர் அறிவைப் பொருந்திய அபீத்தாலிபென்பவரது புதல்வனான உக்கயி லென்பவனுக்கும் ஆரிதென்பவரது புதல்வன் நவுபலென்பவனுக்குந் தமக்கும் ஒழுங்கோடும் அவ்விதம் முதல்விலையாகப் பழய திரவியத்தைக் கொடுத்து மீண்டார்.

 

3604. அண்ணலங் களிற்றை முகம்மதை வளர்த்த

           வடலபுத் தாலிபு திருச்சேய்

     வண்ணவொண் புயனுக் கயிலையுஞ் சிறந்த

           ஆரிது மகனவு பலையு

     நண்ணிய புகழ்சேர் மக்க மாநகருக்

           கனுப்பிநந் நெறியி னப்பாசு

     முண்ணிறை கலிமா வோதியீ மான்கொண்

           டுவந்தினி துறைந்தன ரன்றே.

253