பக்கம் எண் :

சீறாப்புராணம்

1322


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு மீண்ட அந்த அப்பா சென்பவரும் பெருமையையுடைய அழகிய யானையானவர்களும் முகம்மதென்னுந் திருநாமத்தை யுடையவர்களுமான நாயகம் நபிகட் பெருமானார் நபி ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களை வளர்த்த வலிமையுடைய அபீத்தாலி பென்பவரது அழகிய புதல்வனும் பருத்த ஒள்ளிய தோள்களை யுடையவனுமான உக்கயி லென்பவனையும் மேலான ஆரிதென்பவரது புதல்வன் நவுபலென்பவனையும், நெருங்கிய கீர்த்தியைப் பொருந்திய திரு மக்கமா நகரத்திற்கு அனுப்பி விட்டு நமது தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினது மனம் நிறைந்த ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூலுல்லாஹிழு என்னுங் கலிமாவைச் சொல்லி ஈமான் கொண்டு இஸ்லாமாகி இனிமையோடு மகிழ்ந்திருந்தார்கள்.

 

3605. தருவுரை பகர வெதிருரை பகர்ந்த

          தருநபி சிறியதந் தையரு

     மருவுநன் மலரு மெனவரு புறுக்கான்

          மார்க்கநன் னெறிமுறை பயின்று

     செருவடன் மலியன் சாரிக டமக்குஞ்

          செவ்விய முகாசி ரீன்களுக்கு

     மருமருந் தனைய வுயிரெனப் பொருந்தி

          யன்புட னினிதிருந் தனரால்.

254

      (இ-ள்) விருட்சமானது பேச, அதற்குப் பதில் வார்த்தை பேசிய கற்பகச் சோலையை நிகர்த்த நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது சிறிய பிதாவான அந்த அப்பாசு றலியல்லாகு அன்கு அவர்களும், நல்ல பூவும் மணமுமென்று சொல்லும்படி அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவால் அனுப்பப்பட்ட புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தினது தீனுல் இஸ்லாமென்னும் நல்ல மெய்ம் மார்க்கத்தின் ஒழுங்கைக் கொண்ட முறைகளிற் பழகிப் போரினது வலிமையானது பெருகப் பெற்ற அன்சாரீன்களுக்கும் அழகிய முகாஜிரீன்களுக்கும் அரிய அமிர்தத்தை யொத்த பிராணனென்று சொல்லும் வண்ணம் அன்புட னிணங்கி இனிமையோடு மிருந்தார்கள்.

 

3606. வரத்தினிற் சிறந்த ககுபத்துல் லாவி

          னாபுசம் சத்தினீர் வழங்குந்

     துரத்தி னுக்குரிய ராதலாற் பிரியாத்

          தொன்முறை வருதலா னபிக்கும்