இரண்டாம் பாகம்
3633.
கறங்கிய மேற்கடற் கனலி
புக்கபி
னிறங்கிய பாசறை யிடத்திற்
சூழ்தர
மறங்கிளர் வீரரை வைத்தி
யாவரு
முறங்கிய காலையி னொருவ
னாயினான்.
26
(இ-ள்) அவ்வாறு செய்து
சூரியனானவன் ஒலிக்கின்ற மேற்பாற் சமுத்திரத்திற் போய்ச் சேர்ந்த பின்னர்த் தானிறங்கிய
அந்தப் பாசறையின் தானத்திற் சூழும்படி வலிமை நிறைந்த வீரர்களை வைத்து விட்டு அனைவரும் நித்திரைபோன
சமயத்தில் தான் தனித்தவனானான்.
3634.
தன்னுரு வகற்றிவேற் றுருவந்
தாங்கிவிற்
கொன்னுனை வாளொடுங் குந்த
மேந்திப்பின்
முன்னிடந் தெரிகிலாக் கக்குன்
முன்னிநற்
பொன்னியன் மதீனமா
புரம்புக் கானரோ.
27
(இ-ள்) அவ்விதந் தனித்துத்
தனது வடிவத்தை நீக்கி வேறோர் வடிவத்தை நீக்கி வேறொர் வடிவத்தைப் பூண்டு வில்லையும் சத்துராதிகளைக்
கொல்லுகின்ற நுனியையுடைய வாளாயுதத்தோடு கைவேலையுந் தாங்கிப் பின் முன்னுள்ள தானமானது தோற்றாத
அவ்விராப்போதில் நடந்து நல்ல செல்வத்தின் இயல்பையுடைய திருமதீனமா நகரத்திற் போய்ப்
புகுந்தான்.
3635.
அரசர்தம் வீதியு மாவ ணங்களுங்
குரிசிறன் வாயிலுங் கடந்து
கோமகன்
வரும்அகுத் தபுமக னில்லின்
வாயிலின்
கரைபுரள் கதிர்மணிக் கபாடந்
தீண்டினான்.
28
(இ-ள்) அவ்வாறு
போய்ப் புகுந்த அரசகுமாரனான அந்த அபாசுபியா னென்பவன் இராஜர்களினது வீதிகளையும், கடைத்
தெருக்களையும், பெருமையிற் சிறந்தோர்களது வாயில்களையுந் தாண்டிச் சென்று இவ்வுலகத்தில் வந்த
அகுத்தபென்பவனது புதல்வன் வீட்டின் வாயிலிலுள்ள கரைபுரண்ட பிரகாசத்தையுடைய இரத்தினங்களைப்
பதித்த கதவைத் தனது கையினால் தொட்டுத் தட்டினான்.
3636.
புதுமணிக் கதவினிற் புடைத்தி
டத்தொனிக்
கதழ்வுறச் செவியினிற் கலப்பக்
கேட்டெழுந்
துதிர்நறைத் தொங்கன்மார்
புலவ வந்துநின்
றிதமுறக் கவிழ்ந்திருட்
டறுத்து நோக்கினான்.
29
(இ-ள்) புதிய இரத்தினங்களைப்
பதித்த அந்தக் கதவில் அவ்வாறு தட்ட, அவ்வோசையானது உக்கிரமாகக் காதுகளிற் கலக்கும்படி
கேள்வியுற்று எழும்பி மகரந்தக ளுதிர்கின்ற
|