பக்கம் எண் :

சீறாப்புராணம்

1333


இரண்டாம் பாகம்
 

வாசனையையுடைய பூமாலைகள் மார்பில் கிடந்து உலாவும் வண்ணம் அந்த அகுத்தபென்பவனது மகன் வந்து நின்று அந்த காரத்தை யறச் செய்து மகிழ்ச்சியோடுங் குனிந்து பார்த்தான்.

 

3637. கதிபிறி தொன்றிலா கறுபு பெற்றிடும்

     பதகனென் றறிந்தவன் பகரும் வாசகத்

     தெதிர்கொடுத் தழைத்திடல் பழுதென் றெண்ணிமா

     மதியொடு மெழுந்துதன் மனைபுக் கானரோ.

30  

      (இ-ள்) அவ்வாறு பார்த்து வேறொரு போக்குமில்லாத ஹறுபென்பவன் பெற்ற சண்டாளனாகிய அபாசுபியானென்று தெரிந்து அவன் சொல்லுகின்ற வார்த்தைகளுக்குப் பதிற் கொடுத்து நாம் அவனை அழைப்பது குற்றமென்று கருதிப் பெரிய புத்தியோடு மெழும்பித் தனது வீட்டின்கண் போய்ச் சேர்ந்தான்.

 

3638. நின்றனன் கூயின னெடிது தன்மனங்

     கன்றியிங் கொருவருங் காண்கி லோமென

     மின்றிக ழயிலொடு வேறு வீதியிற்

     சென்றனன் றனித்தொரு வாயில் சேர்ந்தனன்.

31

      (இ-ள்) அவன் அவ்வாறு போய்ச் சேர, அந்த அபாசுபியானென்பவன் அதிக நேரம் அங்கு நின்று கூப்பிட்டுத் தனது இதயமானது நைதலுற்று இவ்விடத்தில் ஒருவரையுங் காணோமென்று சொல்லி ஒளிவானது பிரகாசியா நிற்குந் தனது வேலாயுதத்தோடும் வேறொர் தெருவிற் சென்று ஏகமாக ஒரு வாயிலிற் போய்ச் சேர்ந்தான்.

 

3639. பலதிசை யினுமெலப் பார்த்திவ் வில்லினு

     மிலருளர் மாந்தர்க ளென்ன வெண்ணிய

     மலைவொடு மசுக்கமின் மகனில் வாயிலி

     னிலையுறுங் கதவினைப் புடைத்து நின்றனன்.

32

      (இ-ள்) அவ்வாறு போய்ச் சேர்ந்து பல திசைகளிலும் யாரேனுமிருக்கின்றார்களா? வென்று மெல்ல நோக்கி இந்த வீட்டிலும் மாந்தர்க ளிருக்கின்றார்களோ? அல்லது இல்லையோ? என்று நினைத்த மயக்கத்தோடும் அசுக்கமென்பவனது மகனுடைய வீட்டு வாயிலின் நிலையிற் பொருந்திய கதவைத் தட்டி நின்றான்.

 

3640. கங்குலங் காலையிற் கதவைத் தீண்டுதற்

     கிங்கடைந் தவரெவ ரென்ன வில்லுறை

     மங்கையர்க் குரைத்தெழுந் தரிதின் வந்தொளி

     நுங்கிய விருளிடை நோக்கி னானரோ.

33

      (இ-ள்) அவ்வாறு தட்ட, அந்த மசுக்கமென்பவனது மகன் இராக்காலத்தில் கதவைத் தட்டுவதற்கு இங்கு வந்தவர் யாவர்?